இந்திய மகளிர் அணி ஸ்மிருதி மந்தனாவின் ரோல் மாடல் இந்த இடது கை பேட்ஸ்மேன்னா..! யார் தெரியுமா?

Smriti-Mandhana

இந்திய மகளிர் அணியில் கலக்கி வருபவர் ஸ்மிருதி மந்தனா தற்போது லண்டனில் டி20 லீக் போட்டிகளில் ஆடி வருகிறார். அவர் இத்தொடரில் சிறப்பாக ஆடி வருவதுடன் அதிவேக அரைச்சதத்தையும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வி என்னவென்றால் உங்களுக்கு மிகவும் பிடித்த இடது கை ஆட்டக்காரர் யார்.?

kumar

அதற்கு பதிலளித்த மந்தனா எனக்கு இலங்கை அணியின் முன்னாள் இடது கை வீரரான “குமார் சங்கக்காராவை தான் எனது ரோல் மாடலாக வைத்து ” கிரிக்கெட் விளையாடி வருவதாக கூறினார். மேலும் சிறு வயதில் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கும் போது அவர் விளையாடுவதை தொலைக்காட்சியில் விரும்பி பார்ப்பார் எனவும் மேலும் தற்போது தான் விளையாடும் போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால் சங்கக்காராவின் வீடியோ பார்த்தே திருத்தி கொள்வதாகவும் கூறியுள்ளார்.

குமார் சங்கக்காரா இப்பொது லண்டனில் வர்ணனையாளராக இருப்பதால் அவருடன் சேந்து பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது தனது பேட்டிங் குறித்து அவரிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் உங்களது பேட்டிங்கில் பிழை ஒன்றும் இல்லை என்று கூறியதாகவும் சொல்லி பூரிப்படைந்தார். வரும் நவம்பர் மாதம் உலக மகளிர் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. அதிலும் இதே போன்று நல்ல பார்மில் நன்றாக ஆடுவேன். என்றும் நம்பிக்கை தெரிவித்தார் .

Sangakkara
மந்தனா இந்திய மகளிர் அணியில் ஆடிவருகிறார். அவர் ஒரு இடது கை ஆட்டக்காரர் மேலும் எப்போது வேண்டுமானாலும் திடிரென்று ஆட்டத்தை மாற்றும் அளவிற்கு இவரது அதிரடி இருக்கும் என்றல் அது மிகையாகாது.