2011 சச்சின் மாதிரி.. பிரபஞ்சமே வேலை செய்யுது.. விராட் கோலி தவிர யாருக்கும் அந்த தகுதியில்ல.. திவாரி பேட்டி

Manoj Tiwary
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் குஜராத், பெங்களூரு பஞ்சாப் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. அந்த 4 அணிகளில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பது காணப்படுகிறது. குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2008 முதல் தற்போது வரை வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

இருப்பினும் இம்முறை ரஜத் படிதார் தலைமையில் அசத்தி வரும் பெங்களூரு அணி சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து சாதனைப் படைத்தது. மேலும் அந்த அணிக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நாயகன் விராட் கோலி 505 ரன்களை குவித்து அசத்தி வருகிறார். எனவே நல்ல ஃபார்மில் அசத்தி வரும் அந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆர்.சி.பி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

மொத்த பிரபஞ்சமும்:

இந்நிலையில் விராட் கோலிக்காக ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் வேலை செய்து வருவதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். தற்போதைய ஐபிஎல் கோப்பையை மற்ற வீரர்களைக் காட்டிலும் விராட் கோலி வெல்வதற்கு அதிக தகுதியைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நேற்றைய போட்டியில் குஜராத் அணி தோல்வியை சந்தித்ததால் தற்போது ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. பார்க்கப்போனால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாமல் இருக்கும் வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்து முதல் கோப்பையை வெல்வதற்காக செயல்படுவது போல் தெரிகிறது”

- Advertisement -

கோலிக்காக ஜெய்க்கனும்:

“நீண்ட வருடங்களாக காத்திருக்கும் விராட் கோலி அதற்கு தகுதியானவர். ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்ல தகுதியானது. ஒட்டுமொத்த ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு தகுதியான ஒன்று. அந்தக் கோப்பையை வெல்ல விராட் கோலியை தவிர்த்து மற்ற யாரும் அதிக தகுதியுடையவர் கிடையாது. ஏனெனில் 2011 உலகக்கோப்பையை நாம் அனைவரும் சச்சினுக்காக இந்தியா வெல்ல வேண்டுமென்றே விரும்பினோம்”

இதையும் படிங்க: இது தேவையா? ஸ்லெட்ஜிங் செய்த சிராஜை அடித்து நொறுக்கி மாஸ் பதிலடி கொடுத்த நிக்கோலஸ் பூரான்

“இந்திய கிரிக்கெட்டுகாக நீண்ட வருடங்கள் சச்சின் பங்காற்றியவர். அவருக்காக இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதே போல ஐபிஎல் தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து டாமினேட் செய்து வருகிறார். எனவே ஆர்சிபி விராட் கோலிக்காக கோப்பையை வெல்ல வேண்டும். இந்தியாவின் சிறந்த கேப்டனான அவருக்காக கோப்பையை வெல்ல முயற்சி செய்யுங்கள். இந்த வருடம் ஆர்சிபி கோப்பையை வென்றால் அது விராட் கோலிக்கான மரியாதையாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement