சிஎஸ்கே செய்யும் அதே அநியாயம், முதலமைச்சரை பேச சொல்லட்டுமா – கேகேஆரை எச்சரிக்கும் முன்னாள் வீரர்

CSKvsKKR
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 முதல் மே 29 வரை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக இந்தியாவில் மறைந்து கிடக்கும் தரமான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வாய்ப்பும் ஆதரவும் அளித்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் உன்னத நோக்கத்திலேயே கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த பல வருடங்களில் பல தரமான வீரர்களை பரிசளித்து வரும் ஐபிஎல் இந்த வருடத்தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், பஞ்சாப்பின் அர்ஷிதீப் சிங், யாஷ் தயால் போன்ற வீரர்களை அடையாளம் காட்டியது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

சென்னையின் அநியாயம்:
ஆரம்ப காலங்களில் அனைத்து அணிகளிலும் ஒருசில நட்சத்திர வீரர்களுடன் தேவையான வெளிநாட்டு வீரர்களை தவிர பெரும்பாலும் தவிர அந்தந்த மாநிலங்களை சேர்ந்த உள்ளூர் வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சமீப காலங்களில் ஒருசில அணிகள் தங்களது மாநில வீரர்களை நம்பாமல் வெளிமாநில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

அதிலும் தமிழகத்தின் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு முரளி விஜய், அஸ்வின் போன்ற தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் சமீப காலங்களில் ஒரு தமிழக வீரருக்கு கூட விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பளிப்பதில்லை. அதேசமயம் விமர்சனங்களை சந்திக்க கூடாது என்பதற்காக ஹரி நிஷாந்த், ஜெகதீசன் போன்ற வீரர்களை பெயருக்காக வாங்கி பெஞ்சில் அமர வைத்து வாய்ப்பளிக்காமல் அவர்களின் வாழ்க்கையையும் வீணடிக்கிறது.

Natarajan Washingtan Sundar Hari Nishanth

ஆனால் தமிழகம் வாங்காத தினேஷ் கார்த்திக், நடராஜன், வாசிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் ஹைதராபாத், பெங்களூரு உட்பட எஞ்சிய வெளிமாநில அணி நிர்வாகங்களின் நம்பிக்கையையும் வாய்ப்பையும் பெற்று வாய்ப்பைப் பெற்று இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு தங்களின் தரத்தை நிரூபித்துள்ளார்கள். அதனால் பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு அணியில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத சென்னை நிர்வாகத்தின் மீது தமிழக ரசிகர்கள் கடந்த சில வருடங்களாகவே காட்டத்துடன் காணப்படுகிறார்கள்.

- Advertisement -

கேகேஆர் அணியிலும்:
இந்நிலையில் சென்னையைப் போலவே கொல்கத்தா அணியிலும் அதன் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். 2010 – 2013 வரை கொல்கத்தாவுக்கு விளையாடிய அவர் சமீப காலங்களில் அந்த அணி நிர்வாகம் வாய்ப்பளிக்காத ஷமி, சஹா போன்ற சீனியர் பெங்கால் வீரர்களுடன் இளம் பெங்கால் வீரர்கள் எதிரணிகளில் சிறப்பாக செயல்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு மேற்கு வங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக உருவெடுத்துள்ள அவர் இந்த நிலைமை இப்படியே நீடித்தால் கொல்கத்தா அணி உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் கொல்கத்தா மாநில முதல்வரே நேரடியாக இது பற்றி பேசும் நிலைமை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் மாற்றத்தை காண விரும்புகிறேன். கொல்கத்தா அணியில் எப்போதும் நிறைய பெங்கால் வீரர்கள் இருக்க வேண்டுமென்று நான் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறேன். ஐபிஎல் என்பது இந்திய வீரர்கள் மீது கவனம் செலுத்தும் தொடராகவே ஆரம்பிக்கப்பட்டது. அது இந்திய வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு இடமாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் குறிப்பிட்டளவு அண்டர்-19, 23 அளவிலான தரமான உள்ளூர் வீரர்கள் அணியில் இருக்க வேண்டும் என்ற ஒரு விதிமுறை கூட இருந்தது. கொல்கத்தா அணி நிர்வாகத்துடன் நல்ல உறவில் இருந்த போது தரமான உள்ளூர் வீரர்களின் பெயரை நான் பரிந்துரை செய்திருந்தேன்”

Manoj Tiwary 1

“ஆனால் மெதுவாக அது போன்ற விதிமுறைகள் மறைந்து உள்ளூர் வீரர்கள் குறைந்து இதர அணிகளுக்காக விளையாடத் தொடங்கிவிட்டார்கள். மற்ற அணிகளில் பெங்கால் வீரர்கள் தொடர்ச்சியாக விளையாட முடிகிறது என்றால் இங்கே ஏன் முடியாது என்பதே எனது கேள்வியாகும். இதுபற்றி அவர்கள் பேசாமல் அமைதியாகவே இருக்கின்றார்கள். ஒரு உள்ளூர் வீரர் தங்களது அணிக்காக விளையாடினால் அதை பார்த்து நிறைய குழந்தைகள் உத்வேகமடைவார்கள்”

- Advertisement -

“ரசிகர்களும் தங்களது சொந்த மாநில வீரர்களுக்கு ஆதரவளிப்பார்கள். ஆனால் உள்ளூர் வீரர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் மைதானம் ரசிகர்களால் நிரம்பியிருப்பது அணி உரிமையாளர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதனால் உள்ளூர் வீரர்கள் இல்லையென்றாலும் மைதானம் ரசிகர்களால் நிரம்பியிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த விதிமுறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரை மாதிரி நாங்களும் இந்த விடயத்தை செய்வோம் – சவாலுடன் பாகிஸ்தான் அறிவிப்பு

“விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஆனால் அதில் உள்ளூர் வீரர்கள் விளையாடுவது முக்கியம். இதுபற்றி அந்த அணி நிர்வாகத்திடம் நான் கேள்வி எழுப்பப் போவதில்லை. மாறாக எங்களின் மரியாதைக்குரிய முதல்வர் மம்தா பானர்ஜி இது பற்றி ஷாருக்கானிடம் பேசும் எளிதான வழியை பின்பற்ற போகிறேன். ஷாருக்கான் மேற்கு வங்கத்தின் பிராண்ட் அம்பாசிடர். எனவே என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.

Advertisement