ஆர்.சி.பி டீம் ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கணும்னா இதுமட்டும் தான் வழி – மனோஜ் திவாரி பேட்டி

Manoj-Tiwary
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த தொடரில் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இம்முறையும் வழக்கம் போலவே படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அவர்களது மோசமான செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பெரிய அணிகளுக்கு பிறகு மூன்றாவது பெரிய அணியாக பார்க்கப்படும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பு மற்றும் ஆதரவை பெற்றுள்ளது.

ஆனாலும் இந்த தொடரில் ஆர்சிபி அணி விளையாடியுள்ள முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளனர். அதன் காரணமாக இந்த ஆண்டும் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஆர்சிபி அணி சந்தித்து வரும் படுதோல்விகள் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி கூறுகையில் : ஆர்.சி.பி அணி வெற்றி பெற வேண்டுமெனில் கேப்டன் முதல் கடைசி வீரர் வரை என ஒட்டுமொத்த அணியை சேர்ந்த அனைவரையும் மாற்றி விட்டு புது அணியாக கட்டமைக்க வேண்டும்.

இதையும் படிங்க : 712 ரன்ஸ் அடிச்ச ஜெய்ஸ்வால் தடுமாற இதான் காரணம்.. அவரிடம் ரோஹித் பேசணும்.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

இனி ஆர்சிபி அணி இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு கிடையாது. அதேபோல இனி வரும் சீசன்களிலும் அவர்கள் தகுதி பெறும் வாய்ப்பு குறைவுதான். எனவே ஆர்.சி.பி அணியில் உள்ள அனைவரையும் தூக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய அணியை கொண்டு வந்தால் மட்டுமே அவர்களால் ஐபிஎல் தொடரில் வெற்றி பெற முடியும் என மனோஜ் திவாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement