712 ரன்ஸ் அடிச்ச ஜெய்ஸ்வால் தடுமாற இதான் காரணம்.. அவரிடம் ரோஹித் பேசணும்.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

Aakash Chopra 3
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் 2024 தொடர் மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ரியன் பராக், அபிஷேக் சர்மா, மயங் யாதவ் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் இந்த தொடரில் அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணிக்காக தடுமாற்றமாக விளையாடி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏனெனில் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் அதிவேகமான அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த அவர் 625 ரன்கள் குவித்தார். அதனால் இந்திய அணிக்காக அறிமுகமாகி களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் எதிரணிகளை வெளுத்து வாங்கிய அவர் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். குறிப்பாக நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்த அவர் 4 – 1 என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

தடுமாற காரணம்:
அதன் காரணமாக தொடர்நாயகன் விருது வென்று பல சாதனைகளையும் படைத்த அவர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் ஐபிஎல் தொடரில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் இம்முறை ஐபிஎல் தொடரில் 24, 5, 10, 0, 24, 39, 19 என குறைந்த ரன்களில் அவுட்டாகி வருகிறார். அதனால் விரைவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் தேர்வு செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் பெரிய ரன்கள் குவிப்பதற்காக தம்மிடம் அற்புதமான டைமிங் இருப்பதை மறந்து விட்டு ஆண்ட்ரே ரசல் போல ஒவ்வொரு பந்தையும் ஜெய்ஸ்வால் அடித்து நொறுக்க முயற்சிப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே உங்களுடைய திறமைக்கேற்ப எப்போதும் போல் விளையாடுங்கள் என்று ரோகித் சர்மா அவரிடம் சொல்ல வேண்டுமென ஆகாஷ் சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் பற்றி நான் சற்று கவலையடைந்துள்ளேன். ஏனெனில் அவர் இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை. அவர் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்க முயற்சிக்கிறார். உண்மையாக நல்ல வீரரான அவர் தன்னுடைய டைமிங்கை நம்ப வேண்டும். நீங்கள் மல்யுத்த வீரர் அல்லது ஆண்ட்ரே ரசல் கிடையாது”

இதையும் படிங்க: அவரை எங்களால தடுத்து நிறுத்தவே முடியல.. ஒருத்தரா நின்னு எங்களை தோக்கடிச்சிட்டாரு – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

“அவரின் பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமானது. இந்த பையனை எனக்கு பிடிக்கும் என்பதால் குமார் சங்ககாரா பேச வேண்டும். அல்லது ரோஹித் சர்மா தொலைபேசியில். “உங்களுக்கு முன் உலகக் கோப்பை இருக்கிறது. அதற்கு முன் இது போன்ற ஃபாரம் தேவையில்லை. கொஞ்சம் கவனத்துடன் விளையாடுங்கள்” என்று அவரிடம் சொல்ல வேண்டும். ஏனெனில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்கும் அவர் தொடர்ந்து அப்படியே விளையாட முயற்சித்து அவுட்டாகிறார்” என்று கூறினார்.

Advertisement