அவரை எங்களால தடுத்து நிறுத்தவே முடியல.. ஒருத்தரா நின்னு எங்களை தோக்கடிச்சிட்டாரு – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Shreyas
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 223 ரன்கள் அடித்தும் தோல்வியை தழுவியது. அதன்படி நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் என்கிற பெரிய ஸ்கோரை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக துவக்க வீரரான சுனில் நரேன் 56 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 109 ரன்கள் குவித்து அசத்தினார். அதோடு இளம் வீரரான ரகுவன்ஷி 30 ரன்கள் குவித்திருந்தார்.

- Advertisement -

பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது பட்லரின் மிகச் சிறப்பான சதம் காரணமாக இறுதிப் பந்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி சரியாக 204 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் 60 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் வெற்றி பெற செய்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : இது ஒரு வேடிக்கையான விளையாட்டு. பட்லர் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் நாங்கள் இந்த போட்டியில் தோல்வி அடைவோம் என்று நினைக்கவில்லை. ஆனால் ஜாஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று எங்களை வீழ்த்தி விட்டார்.

- Advertisement -

எங்களது பந்துவீச்சாளர்களால் அவரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. நல்ல வேளையாக இந்த தோல்வி இப்போதே கிடைத்து விட்டது. தொடரின் முக்கியமான நேரத்தில் இது போன்ற தோல்வி கிடைத்திருந்தால் அது கடினமாக இருந்திருக்கும். சுனில் நரேன் எங்கள் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அவர் எங்களது அணியில் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். அவரால் ஒரு போட்டியை எப்படி வேண்டும் என்றாலும் மாற்ற முடியும்.

இதையும் படிங்க : காமெடி பண்ணாதீங்கன்னு சொல்லிருப்பேன்.. முதல் சதமடிக்க கம்பீர் தான் காரணம்.. சுனில் நரேன் பேட்டி

அதேபோன்று வருண் சக்கரவர்த்திக்கு 20-வது ஓவரை வழங்கியதற்கு காரணம் யாதெனில் : பந்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவே கொடுத்தேன். இருந்தாலும் பட்லர் அவரையும் அடித்து எங்களை வீழ்த்தி விட்டார். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement