
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விட்டார். ஆனாலும் தொடர்ந்து 2027 ஒருநாள் உலககோப்பை தொடர் வரை ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளார். ஆனால் அடுத்த உலககோப்பை தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதாலும் அதற்குள் ரோஹித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதாலும் ரோஹித் சர்மாவை நீக்க நிர்வாகம் யோசிப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரே அவரது கடைசி தொடராக இருக்கும் என்றும் அதன்பின்னர் ரோஹித் சர்மா ஒருநாள் அணியில் இருந்து கழட்டி விடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ரோஹித் சர்மா ஒருபுறம் தொடர்ந்து விளையாட தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பேட்டிங் பார்மை காரணம் காட்டி ரோஹித் சர்மாவை ஒதுக்க முடியாது. ஏனெனில் இன்றளவும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அற்புதமாக ரன்களை குவித்து வருகிறார். இந்நிலையில் தான் கடினமான பிரான்கோ டெஸ்ட் என்கிற புதிய பிட்னஸ் சோதனையை நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. யோ-யோ டெஸ்டை விட இந்த பிரான்கோ டெஸ்ட் மிக கடுமையான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படி ஒரு புதிய சோதனையை கொண்டுவந்ததே ரோஹித் சர்மாவை வெளியேற்றத்தான் என்று முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அந்த வகையில் மனோஜ் திவாரி கூறுகையில் : இந்திய அணி கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிமுறை எதற்கு என்று புரியவில்லை.
2027 உலகக்கோப்பையில் விராட் கோலியை ஒதுக்க முடியாது. அதேவேளையில் ரோஹித் சர்மாவை பேட்டிங் பார்மை வைத்து ஓரங்கட்ட முடியாது என்பதால் தான் இதுபோன்ற ஒரு கடினமான ரூல்ஸ்ஸை கொண்டு வந்து ரோஹித் சர்மாவை வெளியேற்ற நினைக்கிறது. ரோஹித் சர்மாவை வெளியேற்றத்தான் இந்த விதிமுறை கொண்டு வந்துள்ளதாக நான் நினைக்கிறன்.
இதையும் படிங்க : அது நாற வாய் இது வேற வாயா? ஆசிய கோப்பையில் கெளதம் கம்பீர் ராஜினாமா செய்யனும்.. திவாரி விமர்சனம்
2011 ஆம் ஆண்டு உலககோப்பை தொடருக்கு பின்னர் யோ – யோ டெஸ்டை அறிமுகப்படுத்தி மூத்த வீரர்கள் சிலரை இந்திய அணியின் நிர்வாகம் வெளியேற்றியிருந்தது. அதேபோன்று 2027 உலககோப்பை தொடருக்கு முன்னதாக பிரான்கோ டெஸ்ட் என்கிற பெயரில் சில வீரர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.