ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அந்தத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. அந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்பது ஒரு தரப்பினரின் வாதமாக இருக்கிறது.
ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதில் 26 பேர் இயற்கை எய்தியதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கைகள் எடுத்தது. அதனால் இங்கிலாந்தில் நடைபெற்ற லெஜெண்ட்ஸ லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் இந்திய அணி விலகியது.
நாற வாய் இது வேற வாயா :
அதே போல இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் விளையாடுவதற்கு தடை இல்லை என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று கௌதம் கம்பீர் சொன்னதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட கௌதம் கம்பீர் தற்போது பயிற்சியாளராக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதனால் அது நாற வாய் இது வேற வாயா? என்ற வகையில் கம்பீரை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட விரும்பாத கௌதம் கம்பீர் இப்போது தன்னுடைய பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திவாரி விமர்சனம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் எப்போதும் பாசாங்குத்தனம் கொண்டவர் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் பயிற்சியாளராக இல்லாத போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று அவர் தான் சொன்னார். இப்போது அவர் என்ன செய்யப் போகிறார்? தற்போது அணியின் பயிற்சியாளராக இருக்கும் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கோப்பையில் விளையாட உள்ளார்”
இதையும் படிங்க: புஜாரா தான் எனக்கு ஐபிஎல் கேரியரை கொடுத்தாரு.. 2010இல் கங்குலியிடம் கிடைத்த சான்ஸ் பற்றி உனட்கட்
“இப்போது அவர் தன்னுடைய பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய அணியின் அங்கமாக இருக்க விரும்பவில்லை என்று சொல்லக்கூடாது” எனக் கூறினார். ஏற்கனவே ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் ஆகியோரை கழற்றி விட்டதற்காக கம்பீரை சமீபத்தில் திவாரி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.



