- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் விரக்தியால் போகல.. அவமரியாதையில் சுயமரியாதைக்காக போனாங்க.. மனோஜ் திவாரி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை கேப்டனாக வென்ற ரோஹித் சர்மா சாதாரண வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதனால் அவரும் விராட் கோலியும் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகின்றனர். ஆனால் இப்போதெல்லாம் இந்திய அணி வருடத்திற்கு 6 – 7 போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றது.

- Advertisement -

விராட், ரோஹித் போக விரும்பல:

அந்த 6 – 7 நாட்களில் மட்டும் விளையாடி விராட், ரோகித் தங்களை ஃபிட்டாக நல்ல ஃபார்மில் வைத்துக் கொள்வது மிகப்பெரிய சவாலாகும். அதைத் தவிர்ப்பதற்காக விராட், ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருக்கக் கூடாது என்று ஆகாஷ் சோப்ரா போன்ற சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறாமல் வருடத்திற்கு 10 போட்டிகளில் விளையாடினால் கூட 50 நாட்கள் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சுமாராக விளையாடிய விராட், ரோஹித் இங்கிலாந்தில் கம்பேக் கொடுப்பதற்காக 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடியதாக மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். அப்போது தேர்வுக்குழு அவர்களை வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்ததாகவும் திவாரி மறைமுகமாக தெரிவித்துள்ளார். அதனாலேயே தற்போது விராட், ரோஹித் நிற்கதியாக நிற்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சுயமரியாதைக்காக போனாங்க:

“விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு மனதளவில் தயாராகத் துவங்கினார். ஆனாலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்? ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் அவரைச் சுற்றி இனிமேலும் நீங்கள் தேவையில்லை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அப்படி ஒரு வீரர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அணியில் மதிக்கவில்லை என்று உணர்ந்தால் சுயமரியாதைக்காக தொடர்ந்து விளையாட விரும்ப மாட்டார்”

இதையும் படிங்க: பாக் தலைவருக்கு பதிலடியாக இப்படி கொண்டாடலாம்ன்னு அவர் தான் ஐடியா கொடுத்தார்.. வருண் பேட்டி

“இந்தக் காரணத்தால் மட்டுமே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். அவர் (அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பிரச்சனை) விரக்தியால் நடைபெறவில்லை சுயமரியாதைக்காக வெளியேறினார். நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் வருங்காலத்தில் அதே வழியில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் நீங்கள் எவ்வளவு பெரிய வீரராகவும் இருந்தாலும் அவமதிக்கப்படும் இடத்தில் இருக்க விரும்ப மாட்டீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -