ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் திணறி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் வென்ற சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளில் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்துள்ளது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து சென்னை மோசமாக சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக ஏப்ரல் பதினொன்றாம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 20 ஓவரில் எடுத்த 103 ரன்களை கொல்கத்தா 10.1 ஓவரில் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அந்தளவுக்கு அப்போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.
மூளை நின்று விட்டதா:
அந்தப் போட்டியில் 104 ரன்களை கட்டுப்படுத்திய சென்னைக்கு கேப்டன் தோனி பவர் பிளே ஓவர்களிலேயே அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கினார். அதில் 3 ஓவரில் 30 ரன்கள் கொடுத்த அஸ்வின் எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் ஊதா தொப்பியை வைத்துள்ள நூர் அகமதை 8வது ஓவரில் தோனி கொண்டு வந்தார்.
ஆனால் அவரோ முதல் பந்திலேயே சிஎஸ்கே அணியை அடித்து நொறுக்கி கொண்டிருந்த சுனில் நரைனை அவுட்டாகி அசாத்தினார். இந்நிலையில் அந்தப் போட்டியில் மூளை நின்று போனது போல தோனி, அஸ்வின் செயல்பட்டதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஏன் சிஎஸ்கே அணி ஆரம்பத்திலேயே வரை பலகைக்குச் செல்லவில்லை”
திவாரி விளாசல்:
“இன்று கொல்கத்தா அணியில் இருபுறமும் இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்த போது அஸ்வின் ஆரம்பத்திலேயே ஓவர் தி ஸ்டம்ப் திசையில் பௌலிங் செய்தார். ஆனால் இதற்கு முன்பு அவர் ரவுண்டு தி ஸ்டம்ப் திசையில் பவுலிங் செய்தார். அதைப் பயன்படுத்தி சுனில் நரைன் எளிதாக அடித்தார். அனுபமிக்க வீரரான அஸ்வின் மற்றும் விக்கெட் கீப்பர் தோனிக்கு இது போன்ற சிறிய விஷயங்கள் கூட தெரியாதா?”
இதையும் படிங்க: இந்திய ரசிகர்கள் என்னை பற்றி அப்படி பேசவே மாட்டாங்க.. பாக் பத்திரிகையாளர் கேள்விக்கு – டேவிட் வார்னர் நோஸ்கட்
“அவர்களுடைய மூளை நின்று விட்டதா? இங்கிருந்து சிஎஸ்கே அணி கீழே சென்று கொண்டிருக்கிறது. 20 – 25 வருடங்கள் விளையாடிய பின்பும் அவர்களுடைய பேட்ஸ்மேன்களின் ஷாட் செலக்சனை பாருங்கள். அதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூர் அகமது உங்களுடைய ஊதா தொப்பி வின்னர். ஆனால் அவர் எட்டாவது ஓவரில் பௌலிங் செய்ய வந்து முதல் பந்திலேயே சுனில் நரேன் விக்கெட்டை எடுத்தார். அவரை முன்கூட்டியே பயன்படுத்தாதது எனது புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது” என்று கூறினார்.



