கொல்கத்தாவை சேர்ந்த வீரர் மனோஜ் திவாரி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் 2011 உலகக் கோப்பைக்கு பின் அவருக்கு கணிசமான போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அதில் ஒரு போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற அவருக்கு மீண்டும் சீனியர் வீரர்கள் வந்ததால் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின் ஐபிஎல் தொடரிலும் சுமாராகவே செயல்பட்டு வந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மறுபுறம் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் அந்த காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் மிரட்டலாக விளையாடி தங்களுடைய திறமையை காண்பித்தனர்.
கேள்வி கேட்பேன்:
எனவே அதை உணர்ந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தனது அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் காரணமாக 2015க்குப்பின் மொத்தமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்த மனோஜ் திவாரி அரசியலில் ஈடுபட்டு கொல்கத்தாவின் விளையாட்டு துறை அமைச்சராக முன்னேறியுள்ளார்.
அத்துடன் கடந்த சில வருடங்களாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வந்த அவர் ஒரு வழியாக 2024 சீசனுடன் மொத்தமாக ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரன்கள் அடிக்காத ரோஹித் சர்மா, விராட் கோலி, ரெய்னா போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த நீங்கள் ஆட்டநாயக்கன் விருது வென்ற எனக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை? என தோனியிடம் விரைவில் கேள்வி கேட்கப் போவதாக மனோஜ் திவாரி அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வாய்ப்பு கிடைக்கும் போது இதைப் பற்றி அவரிடம் நான் கேட்க உள்ளேன். கண்டிப்பாக இந்த கேள்வியை அவரிடம் கேட்பேன். குறிப்பாக சதமடித்த பின்பும் நான் ஏன் நீக்கப்பட்டேன் என்று தோனியிடம் கேட்பேன். ஏனெனில் ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா போன்ற யாருமே ரன்கள் அடிக்கவில்லை. இப்போது நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை. 65 முதல் தர போட்டிகளை விளையாடி முடித்த போது என்னுடைய பேட்டிங் சராசரி 65க்கும் மேல் இருந்தது”
இதையும் படிங்க: உன்கிட்ட இருக்கும் அந்த ஸ்பெஷல் திறமையை விட்றாத.. ஜெய்ஸ்வாலை நேருக்கு நேராக அறிவுறுத்திய கும்ப்ளே
“அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் 130 ரன்கள் அடித்த நான் இங்கிலாந்துக்கு எதிராக 93 ரன்கள் அடித்தேன். அதனால் நான் தேர்வுக்கு தயாராக இருந்தும் அவர்கள் யுவராஜ் சிங்கை தேர்ந்தெடுத்தனர். சொல்லப்போனால் நான் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற பின் 14 தொடர்ச்சியான போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டேன். பொதுவாக உச்சத்தில் இருக்கும் ஒரு வீரருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் போனால் அது அவரின் தன்னம்பிக்கையை உடைத்து விடும்” என்று கூறினார்.