உன்கிட்ட இருக்கும் அந்த ஸ்பெஷல் திறமையை விட்றாத.. ஜெய்ஸ்வாலை நேருக்கு நேராக அறிவுறுத்திய கும்ப்ளே

Anil Kumble
- Advertisement -

இளம் கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வால் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி கடந்த 2023 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக அறிமுகமானார். அதில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் 545* ரன்கள் குவித்து மிரட்டி வருகிறார்.

குறிப்பாக இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் விளாசிய அவர் மூன்றாவது போட்டியில் அழுத்தமான இரண்டாவது இன்னிங்ஸில் 214* ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றினார். மேலும் 12 சிக்ஸர்களை அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் உலக சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

கும்ப்ளே அறிவுரை:
அப்படி பேட்டிங்கில் எதிரணியை தெறிக்க விடும் திறமையை கொண்டுள்ள ஜெய்ஸ்வால் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஜெய்ஸ்வாலிடம் தம்மைப் போலவே லெக் ஸ்பின்னராக அசத்தக்கூடிய திறமை இயற்கையாக இருப்பதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசும் முயற்சியைக் கைவிடாதீர்கள் என்று நேருக்கு நேராக அவரை அறிவுறுத்திய கும்ப்ளே இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய பேட்டிங்கிற்காக பாராட்டுக்கள். ஆனால் உங்களிடம் இயற்கையாகவே லெக் ஸ்பின் இருப்பதை நான் பார்த்துள்ளேன். எனவே அதை நீங்கள் தொடர்ந்து முயற்சிக்க நான் விரும்புகிறேன்”

- Advertisement -

“அதை விட்டு விடாதீர்கள். ஏனெனில் அது முக்கிய உதவியாக இருக்கும் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். உங்களுக்கு முதுகு வலி இருக்கிறது என்பதை அறிவேன். ஆனால் அதில் நீங்கள் வேலை செய்ய வேண்டும். குறிப்பாக கேப்டனிடம் சென்று எனக்கு சில ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு கொடுக்குமாறு கேளுங்கள்” என தோளில் தட்டிக்கொடுத்து ஆலோசனை தெரிவித்தார். அதற்கு ஜெய்ஸ்வால் பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: 2 பசங்க அடிச்சு நொறுக்கிட்டாங்க.. அந்த பலவீனத்தை கொண்டுள்ள இங்கிலாந்து தொடரை ஜெயிக்காது.. சஞ்சய் மஞ்ரேக்கர்

“நான் எப்போதும் பவுலிங் செய்ய விரும்பி செல்வேன். ரோகித் சர்மாவும் அதற்கு தயாராக இருக்குமாறு கூறியுள்ளார். எனவே நான் அதற்கு தயாராகவே இருக்கிறேன்” என்று கூறினார். முன்னதாக ஜாம்பவான்கள் சச்சின், சேவாக் போன்றவர்கள் பேட்டிங்க்கு நிகராக பந்து வீச்சிலும் இந்தியாவுக்கு வெற்றியை பெற்று கொடுத்த பெருமைக்குரியவர்கள். எனவே அவர்களைப் போல வருவதற்கு பந்து வீச்சிலும் ஜெய்ஸ்வால் கவனம் செலுத்துவது அவசியம் என்றால் மிகையாகாது.

Advertisement