2 பசங்க அடிச்சு நொறுக்கிட்டாங்க.. அந்த பலவீனத்தை கொண்டுள்ள இங்கிலாந்து தொடரை ஜெயிக்காது.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 4
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவை 12 வருடங்கள் கழித்து அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து அணியினர் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர். அதற்கேற்றார் போல் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றது.

ஆனால் அடுத்த போட்டியில் 399 ரன்களை சேசிங் செய்யும் போது சூழ்நிலைகளுக்கு தகுந்தாற் போல் விளையாடாத இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதை விட ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் மீண்டும் சூழ்நிலையை சமாளித்து விளையாடாத அந்த அணி அதிரடியாக விளையாட முற்பட்டு 434 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இங்கிலாந்தின் பிரச்சனை:
மறுபுறம் முதல் போட்டியில் தோற்றாலும் விராட் கோலி போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இல்லாமலேயே அடுத்த 2 போட்டிகளில் வென்ற இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு இங்கிலாந்தின் பேட்டிங் ஆபத்தானதாக இருப்பதாக சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஆகிய 2 இளம் வீரர்கள் பந்தாடும் அளவுக்கு டாம் ஹார்ட்லி, ரீஹன் அஹ்மத், சோயப் பஷீர் போன்ற இளம் ஸ்பின்னர்களின் பவுலிங் மோசமாக இருப்பதே இங்கிலாந்தின் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் இத்தொடரை இங்கிலாந்து வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இங்கிலாந்தின் அணுகுமுறையை நான் மதிக்கிறேன். அவர்கள் அணியையும் தாண்டி உலக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மகத்தான வேலையை செய்கின்றனர். ஆனால் அடுத்த 2 போட்டியில் அவர்களுடைய பவுலிங் அட்டாக் தான் கவலையாக இருக்கிறது. குறிப்பாக மூன்றாவது போட்டியின் நான்காவது நாளில் அனுபவமற்ற இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் அவர்களுடைய பவுலிங்கை அடித்து நொறுக்கினார்கள். எனவே அனுபவமற்ற ஸ்பின்னர்களை கொண்டிருப்பதில் தான் இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது”

இதையும் படிங்க: அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டிலும் சான்ஸ் கொடுக்கலாம்.. இளம் இந்திய வீரருக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதரவு

“குறிப்பாக முதல் தர கிரிக்கெட்டில் பெரிய அளவில் அனுபவமில்லாத அவர்களுடைய தோளில் மிகப்பெரிய சுமை சுமத்தப்பட்டுள்ளது. அதனால் திடீரென அவர்களால் இந்தியாவை 150க்கு ஆல் அவுட் செய்வது போன்ற செயல்பாடுகளை நான் பார்க்கப் போவதில்லை. இப்போதும் இங்கிலாந்தின் பேட்டிங் ஆபத்தானதாக இருக்கிறது. ஆனால் அவர்களின் அனுபவமற்ற பவுலிங் இந்தியா தொடர்ந்து கம்பேக் கொடுக்க வித்திடுகிறது” என்று கூறினார்.

Advertisement