- Advertisement -
ஐ.பி.எல்

பெஸ்ட் டீம் சி.எஸ்.கே கிடையாது.. பெஸ்ட் கேப்டன் தோனி கிடையாது.. அந்த டீமும், கேப்டனும் தான் பெஸ்ட் – மனோஜ் திவாரி தேர்வு

கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் இதுவரை 55 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

சிறந்த அணி மற்றும் சிறந்த டீம் இதுதான் : மனோஜ் திவாரி

அதனைத்தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான 56-வது லீக் போட்டியும் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு பின்னர் பிளே ஆப் வாய்ப்பை பெறும் அணிகளுக்கு இடையேயான போட்டி பலமாக நிலவும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி ஐபிஎல் தொடரில் சிறந்த அணி எது? என்பது குறித்தும் சிறந்த கேப்டன் யார்? என்பது குறித்தும் தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதுவரை நான் விளையாடியதிலும் சரி, பார்த்ததிலும் சரி சிறப்பான ஐபிஎல் அணி என்றால் அது 2012 ஆம் ஆண்டு விளையாடிய கே.கே.ஆர் அணி தான். அந்த வருடம் கொல்கத்தா அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெற்ற அந்த வெற்றி மறக்க முடியாத ஒன்று. எனவே என்னை பொருத்தவரை மிகச் சிறந்த அணி என்றால் அந்த அணி கே.கே.ஆர் அணியை தான் கூறுவேன்.

- Advertisement -

அதேபோன்று ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டனாக நான் ரோகித் சர்மாவை தான் சொல்லுவேன் என்று கூறியுள்ளார். ஏனெனில் மும்பை அணிக்கு ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் பாண்டிங் ஆகியோர் கேப்டனாக இருந்தும் பெறாத வெற்றிகளை ரோகித் சர்மா வந்து பெற்றதால் அவரை சிறந்த கேப்டன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : எல்லாம் சரியா வந்தப்போ.. குறுக்கே அது வந்து வெற்றி பறிச்சுடுச்சு.. 2019 உ.கோ தோல்வி பற்றி கோலி வேதனை

மேலும் கொல்கத்தா அணிக்காக விளையாடிய போது கோப்பையை வென்ற தொடரின் இறுதி போட்டியில் மிகச் சிறப்பாக பங்களித்ததை நினைத்து நான் ஒரு அதிர்ஷ்டவாளி என்று கருதுதுவதாக மனோஜ் திவாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -