ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை சி.எஸ்.கே கெத்தா ? மும்பை கெத்தா ? – புள்ளி விவரப்படி இவங்கதான் நம்பர் 1

CskvsMi
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் தற்போது அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற அடுத்த சிலமாதங்களுக்கு வாய்ப்பில்லை.

csk-vs-mi

- Advertisement -

இதனால் இந்தியாவில் மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐ.பி.எல் தொடரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கடுத்தும் இந்த தொடர் துவங்குமா ? என்பது கேள்விக்குறிதான். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த தொடர் மீண்டும் துவங்க எந்த திட்டமும் பலிக்காது என்பதே உண்மை.

இந்நிலையில் இந்த பன்னிரண்டு ஆண்டு கால ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகளில் எந்த அணி சிறந்த அணி என்பது குறித்து புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில் :

Sanjay

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த மொத்த தொடரின் வெற்றி சதவீதத்தை வைத்து நாம் பார்க்கும்போது சிஎஸ்கே அணியே டாப்பில் உள்ளது. அதேசமயம் கோப்பைகளின் அடிப்படையில் வைத்து பார்த்தால் மும்பை அணி 4 முறையும், சிஎஸ்கே அணி மூன்று முறையும் கோப்பையை வென்று உள்ளதால் அந்த வகையில் மும்பை அணி உச்சத்தில் உள்ளது.

- Advertisement -

இருப்பினும் 2 ஆண்டு தடை காரணமாக மும்பை அணியை விட சென்னை அணி குறைவான போட்டிகளில் விளையாடி உள்ளது. மேலும் சென்னை அணி மும்பை அணியை விட அதிக போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சென்னை அணியை மிரட்டும் விதமாக மும்பை அணி பலமாக உருவெடுத்துள்ளது.

தற்போது உள்ள சூழலில் மும்பை அணியும் சென்னை அணியும் பைனலில் மோதினால் மும்பை அணியை வெற்றிபெறும் அணியாக உள்ளது. அதேபோல் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரை வைத்துப் பார்க்கும்போது சென்னை அணியை விட மும்பை அணி ஒரு படி மேலே தான் என்று வழக்கம்போல் மும்பை அணிக்கு ஆதரவாக கருத்தினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement