விராட் கோலி இப்படி கூறியது தவறு. தோனியிடமிருந்து அவர் இதனை கற்றுக்கொள்ள வேண்டும் – மஞ்சரேக்கர் விளாசல்

Sanjay
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இதுவரை டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்கிற கணக்கில் வென்றது. பின்னர் நடைபெற்ற டி-20 தொடரை 3-2 என்கிற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட்கோலி , சில வார்த்தைகளைப் பேசி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Kohli

- Advertisement -

டி20 தொடரின் 5வது போட்டியில் விராட் கோலி ரோகித் சர்மா உடன் இணைந்து ஓப்பனிங் விளையாடினார். அது நல்ல வகையில் அமைந்தது. எனவே இனி தேவைப்படும் காலங்களில் ரோகித் சர்மா நிறைந்த ஓபன் செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். ஒரு போட்டியை மட்டும் வைத்துக்கொண்டு மொத்தமாக முடிவெடுத்து விட முடியாது கொஞ்சம் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் , கோலி இடம் இது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த கோலி விமர்சனங்கள் எப்பொழுதும் முட்டாள்தனமாக இருக்கும்.அவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ள முடியாது அனைத்து எது தேவையோ அதை சரியாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் அதை பெரிதாக கணக்கில் கொள்வதில்லை என்று கூறினார். மேலும் பேசிய விராட் கோலி வரும் காலங்களிலும் அணிக்கு எது தேவையோ அதைத்தான் நாங்கள் செய்வோம் என்றும் கூறினார்.

Kohli-2

இந்நிலையில் விராட் கோலி விமர்சனங்களை முட்டாள்தனமானது என்று கூறியதை வைத்து பார்க்கையில் அவர் ஒட்டுமொத்த விமர்சகர்களையும் முட்டாள்தனமானவர்கள் என்று கூறியிருக்கிறார். இவர் இவ்வாறு கோலி கூறியிருந்திருக்க கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.

Dhoni-kohli

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விமர்சனங்கள் எழுந்தாலும் அதை மிகக் கூலாக கையாளுவார் , அதை விராட் கோலியும் பின்பற்ற வேண்டும். விமர்சகர்கள் நல்லதையும் கூறுவார்கள் கெட்டதையும் கூறுவார்கள் , விமர்சகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களும் அவர்களது கருத்துக்களை விமர்சனங்கள் வாயிலாக கூறுவார்கள். எனவே அந்த விமர்சனங்களையும் மற்றும் விமர்சனங்களை கூறுபவர்களையும் மிக பொறுமையாக கையாண்டு பின்னர் நிதானமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

Advertisement