இளம்வீரருக்கு 2 ஆண்டுகள் தடைவிதித்து அதிரடி. இனிமே இந்த தப்பை யார் செய்தாலும் இதே நடவடிக்கை தான் – விவரம் இதோ

Manjot-2
- Advertisement -

இந்திய அணி இளம் வீரர்கள் விரைவாக முதல் தரப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆசையால் பல வீரர்கள் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் தங்களது வயதை குறைவாகக் கூறி அணிகளில் பங்கேற்பது தற்போது பிரச்சினையாக வலுத்து வருகிறது. மேலும் அண்டர் 19, அண்டர் 16 என அணியில் இணைய வீரர்கள் வயது மோசடியில் ஈடுபடுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

Manjot 1

- Advertisement -

அப்படி சிக்கலாக சூழ்நிலை மாறி வரும் நிலையில் அவர்கள் மீதான நடவடிக்கையை கடுமையாக உள்ளது. அதன்படி தற்போது டெல்லி மாநில கிரிக்கெட் அணியில் வயது மோசடி செய்த வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வயது மோசடி செய்த வீரர்கள் மீது விசாரணை நடந்தது. அதன்படி ஒவ்வொரு வீரர் மீதும் தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது டெல்லி அணியில் சிறப்பாக விளையாடி வரும்இளம் வீரரான மன்ஜோட் கல்ரா என்ற வீரருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து டெல்லி கிரிக்கெட் அதிரடி காட்டி உள்ளது. மேலும் இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் வயது மோசடியில் சிக்கிய அனைத்து வீரர்களுக்கும் இனிமேல் கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் அந்தந்த மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Manjot

2018ஆம் ஆண்டு 200 உலக கோப்பை தொடரில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு மன்ஜோட் கல்ரா அந்த தொடரில் சிறப்பாக ஆடினார். ப்ரித்வி ஷா மற்றும் கில் உள்ளிட்டோர் இடம் இந்த அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். அண்டர் 19 இறுதிப் போட்டியில் சதமடித்த அவர் பெரிய வீரராக வலம் வருவார் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். மேலும் ஐபிஎல் அணியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement