தோனி, ரோஹித், விராட் ஆகிய ஜாம்பவான்களோடு 4 ஆவது வீரராக வரலாற்று பட்டியலில் இணைந்த – மனிஷ் பாண்டே

Manish Pandey
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக விளையாடிய நட்சத்திர பேட்ஸ்மேனான மனிஷ் பாண்டே ஐபிஎல் வரலாற்றில் மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து நான்காவது வீரராக மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதுகுறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த மனிஷ் பாண்டே :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன் பிறகு ஏழாவது ஓவரின் இறுதியில் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஏழாவது வீரராக இம்பேக்ட் வீரர் விதிமுறைப்படி மணிஷ் பாண்டே களமிறங்கினார். இந்த போட்டியில் சற்று சுதாரித்து விளையாடிய அவர் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 12.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 121 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய மணிஷ் பாண்டே படைத்த சாதனை யாதெனில் : இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரானது நடைபெற்று வருகிறது. அப்படி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அதாவது அனைத்து சீசன்களிலும் விளையாடிய மூன்று வீரர்களாக தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இப்படி நடந்தா பவுலர்களால் என்ன பண்ண முடியும்? தோல்விக்கு முழுக்காரணம் இதுதான் – ரஹானே வருத்தம்

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கியதன் மூலம் இந்த சீசனிலும் ஒரு போட்டியில் விளையாடியுள்ள மணிஷ் பாண்டே தோனி, ரோஹித், விராட் கோலிக்கு அடுத்து அனைத்து சீசன்களிலும் விளையாடிய நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான மனிஷ் பாண்டே அதனை தொடர்ந்து பல்வேறு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

Advertisement