தொடர்ந்து சொதப்பும் இந்த 2 வீரர்களுக்கு பதிலா இவங்க 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் – கோலி செய்யும் தவறு

ind-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

- Advertisement -

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

இந்நிலையில் இவ்விரு போட்டிகளிலும் இந்திய அணி தோற்றதற்கு முக்கிய காரணமாக அணியின் பந்துவீச்சு பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி தொடர்ச்சியாக சொதப்பலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி முதுகுவலி பிரச்சினை காரணமாகவும் அவதிப்படுகிறார். எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று ரசிகர்கள் தங்களது கோரிக்கை வைத்துள்ளனர்.

- Advertisement -

மேலும் தொடர்ச்சியாக யார்க்கர் வீசும் நடராஜன் அதுமட்டுமின்றி சில வேரியேஷன்களையும் பந்துவீச்சில் முயற்சித்து வருகிறார். எனவே அவருக்கு வாய்ப்பளிக்க கடைசி போட்டியில் முயற்சிக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி மற்றொரு வீரராக ஸ்ரேயாஸ் அய்யரை மிடில் ஆர்டரில் இருந்து நீக்கிவிட்டு ஐபிஎல் தொடர்களில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிஷ் பாண்டே அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Nattu

ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருந்தாலும் வெளியில் அமர்ந்திருக்கும் பாண்டேவிற்கு கடைசி போட்டியில் சோதனை வாய்ப்பாவது கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது குறித்து உங்களது கருத்துக்களை கீழே பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement