புதிய வீரர்களின் வருகையால் வாய்ப்பை இழந்த 2 அட்டகாசமான வீரர்கள் – இவர்களுக்கா இந்த நிலைமை

Sky
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்று இரவு ஏழு மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவார்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

INDvsENG

- Advertisement -

மேலும் இந்த தொடரில் ஒருசில இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திவாதியா ஆகியோர் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்றைய போட்டியில் தெரிந்துவிடும். ஆனால் இந்த புதிய வீரர்களின் வருகையால் வாய்ப்பை இழந்த இருவரை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

இந்திய டி20 அணியில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றதன் காரணமாக இரு முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வீரர்கள் யாரெனில் எப்போதும் ஷார்ட்டர் பார்மெட்டில் சிறப்பாக விளையாடும் மனிஷ் பாண்டே மற்றும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும்தான். இதில் சஞ்சு சாம்சன் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறியவர் டி20 போட்டிகளில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 83 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

Samson

ஆனால் மனிஷ் பாண்டே நீண்டகாலமாகவே அணியில் உள்ளேயும், வெளியேயும் இருந்தாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த கூடிய ஒருவர், இருப்பினும் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியில் அவர்களைத் தேர்வு செய்வதில் தவிர்க்கமுடியாத ஒரு காரணத்தை ஏற்படுத்தியது. இவர்களின் தேர்வினால் தற்போது சஞ்சு சாம்சன் மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இருவரும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

pandey 1

இதனிடையே மனிஷ் பாண்டேவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement