ரஹானே மீண்டும் பார்முக்கு திரும்பணுனா ரவி சாஸ்திரி இதை செய்தே ஆகவேண்டும் – முன்னாள் வீரர் பேட்டி

Rahane-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்கி நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றி உடன் தொடரில் சமநிலை வகிக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி துவங்க உள்ளது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் மோசமாக செயல்பட்ட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் இந்திய அணியின் துணை கேப்டனான ரஹானே மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் இந்தத் தொடர் முழுவதிலும் விளையாடிய ரஹானே 5 இன்னிங்ஸ்களையும் சேர்த்து 95 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் 61 ரன்கள் குவித்த ரஹானே மீதமுள்ள 4 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் ரஹானேவின் இந்த மோசமான பார்ம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான மணீந்தேர் சிங் கூறுகையில் : இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி அனைவரையும் ஊக்கப்படுத்த கூடியவர். அந்தவகையில் ரஹானே அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் தற்போது அவருக்கு சரியான அறிவுரை தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் அவர் அனுபவ வீரர் என்பதற்காக அவருக்கு அறிவுரை தேவை இல்லை என்று நினைக்காமல் அவருக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் ரவிசாஸ்திரி-யிடம் உள்ளது.

shastri

சில நேரங்களில் மிகப்பெரிய வீரர்களுக்கு கூட ஊக்கப்படுத்துதல் அவசியமான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் தற்போது ரவி சாஸ்திரியின் ஊக்கம் நிச்சயம் ரஹானேவுக்கு தேவை. ரவிசாஸ்திரி அவரை ஊக்கப்படுத்தி பேசினால் நிச்சயம் ரஹானே மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரகானே மைதானத்தில் எப்போதும் படபடப்பாக இருக்ககூடியவர். அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை.

rahane

இந்திய மைதானத்தை காட்டிலும் வெளிநாட்டு மைதானத்தில் ரகானே சிறப்பாக செயல்படக் கூடியவர் இருப்பினும் அவர் இந்த இங்கிலாந்து தொடரில் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அவர் நிச்சயம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீண்டு வருவார் என மணீந்தர் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement