IPL 2023 : இவருக்கு எப்டி 110 மேட்ச் சான்ஸ் கிடைச்சுது? டிகே, ரோஹித்தை மிஞ்சிய இந்திய வீரர் மோசமான சாதனை – ரசிகர்கள் விளாசல்

Mandeep SIngh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் போராடி 204/7 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 57 (44) ரன்கள் எடுத்தாலும் எதிர்ப்புறம் வெங்கடேஷ் ஐயர் 3, மந்திப் சிங் 0, கேப்டன் நிதிஷ் ராணா 1, ஆண்ட்ரே ரசல் 0 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 89/5 என திணறிய அந்த அணி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது களமிறங்கி சரவெடியாக செயல்பட்ட சர்தூள் தாக்கூர் 20 பந்துகளில் தன்னுடைய முதல் ஐபிஎல் அரை சதமடித்து 9 பவுண்டரி 3 சிக்சருடன் 68 (29) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அவருடன் 6வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரிங்கு சிங் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (33) ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

மோசமான சாதனை:
அதை தொடர்ந்து 205 ரன்கள் துரத்திய பெங்களூருக்கு 44 ரன்கள் ஓப்பனிங் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த விராட் கோலி 21 (18) ரன்களிலும் டு பிளேஸிஸ் 23 (12) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல் 19, கிளன் மேக்ஸ்வெல் 5, ஹர்சல் பட்டேல் 0, சபாஷ் அகமது 1, தினேஷ் கார்த்திக் 9, அனுஜ் ராவத் 1 என முக்கிய பேட்ஸ்மேன்களை ஒற்றை ரன்களில் அவுட்டாக்கிய கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளையும், சூயஸ் சர்மா 3 விக்கெட்டுகளையும், சுனில் நரேன் 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

முன்னதாக இந்த தொடரில் 31 வயதாகும் இந்திய வீரர் மந்திப் சிங் பஞ்சாப்புக்கு எதிரான முதல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 2 (4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அதனால் இந்த போட்டியில் அவருக்கு 3வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை கொல்கத்தா கொடுத்தது. ஆனால் டேவிட் வில்லி வீசிய 4வது ஓவரின் 2வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் க்ளீன் போல்ட்டாகி சென்ற நிலைமையில் களமிறங்கிய அவர் கொஞ்சமும் முன்னேறாமல் முதல் பந்திலேயே கிளீன் போல்ட்டாகி கோல்டன் டக் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இதன் வாயிலாக ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோரை மிஞ்சி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. மந்தீப் சிங் : 14* (97 இன்னிங்ஸ்)
2. தினேஷ் கார்த்திக் : 13 (210 இன்னிங்ஸ்)
3. ரோஹித் சர்மா : 13 (223 இன்னிங்ஸ்)

இதில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் கூட 200 போட்டிகளுக்கு மேல் விளையாடி 2வது இடத்தில் இருக்கும் நிலையில் இவர் 100 இன்னிங்ஸ்களுக்குள் முதலிடம் பிடித்ததிலிருந்தே எந்தளவுக்கு மோசமாக செயல்பட்டு வருகிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் 2010 முதல் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி 2016 வாக்கில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

- Advertisement -

ஆனால் 3 போட்டிகளில் விளையாடி 87 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரிலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு கடந்த 10 வருடங்களில் எப்போதும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை. குறிப்பாக இதுவரை 110 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 97 இன்னிங்ஸில் 1694 ரன்களை 20.91 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: IPL 2023 : நேற்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களால் நடைபெற்ற அரிதான நிகழ்வு – விவரம் இதோ

இருப்பினும் சுரேஷ் ரெய்னா போன்ற தரமான வீரருக்கே வாய்ப்பு கிடைக்காத ஐபிஎல் தொடரில் இப்படி மோசமாக செயல்படும் இவருக்கு எப்படி மட்டும் 110 போட்டிகளை தாண்டி இன்னும் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது என்பதே ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

Advertisement