உன்முக்த் சந்த்தை தொடர்ந்து 30 வயதில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வீரர் – அடப்பாவமே

Manan
- Advertisement -

இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரை வென்று கொடுத்த கேப்டன் உன்முக்த் சந்த் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்து வாய்ப்புக்காக அமெரிக்கா செல்கிறார் என்று அறிவித்திருந்தார்.

manan 1

- Advertisement -

இந்நிலையில் அவரை தொடர்ந்து மற்றொரு டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான மனன் சர்மா தற்போது இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். மேலும் தான் இந்த ஓய்வு முடிவை அறிவித்தது இங்கிருந்து எனது வாய்ப்புக்காக கலிபோர்னியா செல்ல இருப்பதாகவும், அங்கு எனக்கு கிடைக்கும் சிறந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் சர்மாவின் மகன் மனன் சர்மா விராட் கோலி, ரிஷப் பண்ட், கௌதம் கம்பீர் ஆகியோருடன் டெல்லி அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக அறிமுகமாகிய இவர் 1708 ரன்களை குவித்துள்ளார். 35 பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் 8 அரை சதங்கள் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 113 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

manan 2

கடந்த 2016ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அடிப்படை விலையான பத்து லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் கழட்டி விடப்பட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது இனி இந்தியாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த அவர் இங்கிருந்து ஓய்வு பெற்றுவிட்டு அமெரிக்கா சென்று கிரிக்கெட் விளையாட இருக்கிறார்.

manan 3

ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோர் அணியில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் பட்டேல், உன்முக்த் சந்த் ஆகியோர் ஓய்வை அறிவித்து அமெரிக்கா சென்ற நிலையில் தற்போது மனன் சர்மாவும் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னுடைய கிரிக்கெட் கரியரில் அடுத்த அடிக்காக நான் அமெரிக்கா செல்கிறேன். அங்கிருக்கும் கிளப் அணிக்காக எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே நான் இனியும் தாமதம் இல்லாமல் அங்கு சென்று எனது அடுத்த கட்டத்திற்கு நகர உள்ளேன் என மனன் சர்மா கூறியுள்ளார்.

Advertisement