நான் ஓய்வு பெறுவதற்கு முன் இதனை செய்தால் போதும். என் ஆசை இதுதான் – மலிங்கா ஓபன் டாக்

Malinga-1

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது வித்தியாசமான பந்துவீச்சை முறை மற்றும் துல்லியமான யார்க்கர் ஆகியவற்றின் மூலம் மிகப் பெரும் பிரபலம் அடைந்தார். இலங்கை அணிக்காக பல வருடங்களாக சிறப்பாக பந்து வீசி வரும் தற்போது இலங்கை அணியின் கேப்டனாகவும் டி20 போட்டிகளில் செயல்பட்டு வருகிறார்.

Malinga

அத்துடன் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையும் மலிங்கா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20 அணிக்கு அணியில் விளையாடி வருகிறார். மேலும் இலங்கை அணியை வழிநடத்தியும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு இடையே தொடங்க இருக்கும் இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னர் ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ஓய்வுக்கு முன் தான் செய்ய விரும்பும் ஆசை குறித்து அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். இப்பொழுது இலங்கை அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை செய்ய தயாராக இருக்கிறேன். நான் விளையாடியது போதும் என்று அவர்கள் நினைத்தால் ஓய்வு பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Malinga-2

ஆனால் டி20 உலக கோப்பை நாக்அவுட் சுற்றில் விளையாட விளையாடுவது எனது ஒரே ஆசை நாக்கவுட்டில் இலங்கை அணி தகுதி பெற்றால் அதற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவதை நான் பொருட்படுத்த மாட்டேன். இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அனுபவம் வரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட எங்கள் அணி வீரர்களுக்கு உதவும் என்றும் மலிங்கா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -