12 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு வந்த பிரபல பங்களாதேஷ் வீரர் – ஓய்வு அறிவிப்பு

Bangladesh
- Advertisement -

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கிரிக்கெட் போட்டிகள் பெரிதளவு நடத்தப்படாமல் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். அந்தவகையில் பங்களாதேஷ் அணியை சேர்ந்த முன்னணி நட்சத்திர வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளார்.

mahmudullah 1

- Advertisement -

அந்த வகையில் பங்களாதேஷ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் முகமதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான அவர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 200 ஒருநாள் போட்டிகள் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2009ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் தற்போது தனது 12 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2914 ரன்களையும், 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் அடங்கும். தனது 50-வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டியில் 150 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்து அந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

mahmudullah

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஓய்வு அறிக்கையில் : பங்களாதேஷ் அணி நிர்வாகம் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. நான் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பிய போது என்னை அணி நிர்வாகமும், வீரர்களும் வரவேற்று உற்சாகமளித்தனர். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வு முடிவினை அறிவிக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியை விட இவரே 3 வகையான கிரிக்கெட்டுக்கும் சிறந்த கேப்டனாக இருப்பார் – சல்மான் பட் கருத்து

இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நான் தொடர்ந்து விளையாடி எனது சிறப்பான ஆட்டத்தை பங்களாதேஷ் அணிக்காக வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஓய்வு அறிவிப்பு பங்களாதேஷ் நாட்டு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement