என்னோட ஆசை அவங்க ஜெயிக்க கூடாது அவ்ளோ தான், பார்டர் – கவாஸ்கர் தொடரின் வெற்றியாளர் பற்றி ஜெயவர்தனே அதிரடி கருத்து

- Advertisement -

2023 ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் அணிகளை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தீர்மானிக்க உள்ளது. குறிப்பாக இதுவரை நடைபெற்ற லீக் சுற்று போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா என முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகளிடையே பைனலுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி காணப்படுகிறது. அதில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட பைனலுக்கு தகுதி பெற்று விட்டது என்றே சொல்லலாம். மறுபுறம் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வென்றால் பைனலுக்கு தகுதி பெறலாம் என்ற பிரகாசமான நிலைமையில் உள்ளது.

IND-vs-AUS

- Advertisement -

அதே சமயம் 3, 4 ஆகிய இடங்களில் இருக்கும் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பைனலுக்கு தகுதி பெற முறையே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தங்களது கடைசி டெஸ்ட் தொடரில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதை விட அதற்கு முன்பாக இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வென்றால் தான் தங்களது கடைசி தொடரில் வென்று பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையில் அந்த அணிகள் உள்ளன.

ஜெயவர்தனே ஆசை:
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு உள்ளது. ஆனால் 2014க்குப்பின் அனைத்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.

AUs vs IND

அது போக 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று பைனலுக்கு தகுதி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் இலங்கையைச் சேர்ந்தவர் என்ற முறையில் இத்தொடரில் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்வதை விரும்புவதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் மகிளா ஜெயவர்தனே வெளிப்படையாக பேசியுள்ளார். ஆனால் அது கடினம் என்பது தமக்கு தெரியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் இலங்கையைச் சேர்ந்தவனாக ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச் சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலியா நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம். அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச் சிறந்த தொடராக அமையப் போகிறது” என்று கூறினார்.

Jayawardene

மேலும் நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்துள்ள சுப்மன் கில் பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் நுணுக்கங்கள் அடிப்படையில் சிறப்பாக காணப்படுவதுடன் வேகப்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளும் வீரராக இருக்கிறார். அவரால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். இருப்பினும் அது கடினமாக இருக்கும் என்பதால் இத்தொடர் மிகவும் சிறப்பாக அமையும்”

இதையும் படிங்க: IND vs AUS : அவர் ஒரு GUN பவுலர். அவருக்கு எதிரா நாம ஜாக்கிரதையா தான் இருக்கனும் – உஸ்மான் கவாஜா கருத்து

“வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு நல்ல சார்பில் இருக்கும் அவர் அதை டெஸ்ட் கிரிக்கெட்டின் கால சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்பட்டால் இந்திய டாப் ஆர்டரில் மிகப்பெரிய சொத்தாக அமைவார். அவரால் ஆரம்பத்திலேயே நல்ல தொடக்கத்தை கொடுத்து எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த முடியும்” என்று கூறினார்.

Advertisement