இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கும் எல்லா கெப்பாசிட்டியும் அவரிடம் இருக்கு – ஜெயவர்த்தனே புகழாரம்

- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய ஆரம்ப அமீரகத்தில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி வெளியேறியதால் மிகவும் அதிருப்தி அடைந்த இந்திய அணியின் நிர்வாகம் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்காக தற்போது இந்திய அணியை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரோகித் சர்மாவின் தலைமையில் தற்போது பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அணி வலுவாக கட்டமைக்கப்பட்டு வரும் வேளையில் இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுலுக்கு தொடர்ச்சியான காயம் ஏற்பட்டு வருவது அணியின் நிர்வாகத்திடையே பெரும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Rahul

- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் தொடர்ச்சியாக காயம் காரணமாக ராகுல் பல தொடர்களை தவற விட்டார். அதன் காரணமாக இந்திய அணியின் துவக்க வீரர்களுக்கான இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என ஏகப்பட்ட வீரர்கள் துவக்க வீரராக களம் இறக்கி பரிசோதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் காயத்தில் இருந்து குணமடைந்த ராகுல் துவக்க வீரருக்கான இடத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் துவக்க வீரராக எதிர்வரும் ஆசிய கோப்பையிலும் சரி, டி20 உலக கோப்பையிலும் சரி எந்த வீரர் விளையாட வேண்டும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே இந்திய அணியின் துவக்க வீரருக்கான இடம் குறித்து தற்போது சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் தற்போது பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

Rishabh Pant 44

என்னதான் இந்திய அணியின் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினாலும் துவக்க வீரருக்கான இடம் என்பது அவசியமான ஒன்று. அந்த வகையில் என்னை பொறுத்தவரை பலவீரர்கள் அந்த இடத்தில் உபயோகப்படுத்தப்பட்டு இருந்தாலும் ரிஷப் பண்ட் ரோகித்துடன் துவக்க வீரராக சிறப்பாக விளையாடுவார் என்பதே எனது கருத்து. ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் ரிஷப் பண்ட் அதிக அளவு துவக்க வீரராக களமிறங்கவில்லை.

- Advertisement -

இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரால் துவக்க வீரராக களம் இறங்கும் அனைத்து தகுதிகளும் உள்ளது. ரிஷப் பண்ட் ஒரு நேச்சுரல் பிளேயர் அவரால் எந்த சூழ்நிலையிலுமே ஒரே மாதிரி அதிரடியாகத்தான் விளையாட முடியும். எனவே இந்திய அணிக்கு அதிரடியான துவக்கம் தேவைப்படும் பட்சத்தில் நிச்சயம் ரிஷப் பண்ட் துவக்க வீரருக்கான சரியான ஒரு தேர்வாக இருப்பார்.

இதையும் படிங்க : தினேஷ் கார்த்திக்கால் நிச்சயம் அந்த விஷயத்தில் இந்திய அணிக்கு தான் பிரச்சனை – முன்னாள் வீரர் கருத்து

எனவே ஆசிய கோப்பையிலும் சரி, டி20 உலக கோப்பையிலும் சரி அவரே ரோகித்துடன் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என ஜெயவர்த்தனே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement