தினேஷ் கார்த்திக்கால் நிச்சயம் அந்த விஷயத்தில் இந்திய அணிக்கு தான் பிரச்சனை – முன்னாள் வீரர் கருத்து

Dinesh Karthik Ashwin
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பை தொடரில் விளையாட ஆயத்தமாகி வருகிறது. எதிர்வரும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆசிய கோப்பை நடைபெற உள்ளதால் இந்த ஆசிய கோப்பை தொடரில் பயன்படுத்தப்படும் வீரர்களே பெரும்பாலும் உலகக்கோப்பை அணியில் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டு வரும் வேளையில் தற்போது இந்திய அணியில் உள்ள சிக்கல்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

IND

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் இந்திய அணியில் உள்ள குளறுபடிகள் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது டாப் ஆர்டர் மிக வலிமையாக உள்ளது. ஏற்கனவே ரோஹித், கே.எல் ராகுல், விராத் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என ஏழு வீரர்கள் வரை இந்திய அணியில் பேட்டிங் செய்யும் வீரர்களாக உள்ளனர்.

இப்படி ஏழு வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கும் போது அணியில் நான்கு பந்துவீச்சாளர்கள் தான் பயன்படுத்தப்படுவார்கள். ஐந்தாவது பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா முழு நேரமாக நான்கு ஓவர்களை வீச வேண்டிய நிலை வரும். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஹார்டிக் பாண்டியாவை ஆறாவது பவுலிங் ஆப்ஷனாகவே வைத்து விளையாட விரும்புவார். இதன் காரணமாக நிச்சயம் ஏழு பேட்ஸ்மேன்களில் ஒருவர் நீக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

Dinesh Karthik 1

அந்த வகையில் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவரை தான் விளையாட வைக்க முடியும். பினிஷராக தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டாலும் அவரை அணியில் விளையாட வைக்கும் போது நிச்சயம் நான்கு பந்துவீச்சாளர்களை மட்டும் தான் பயன்படுத்த முடியும்.

- Advertisement -

எனவே தினேஷ் கார்த்திக் விளையாடும் போது நிச்சயம் இந்திய அணிக்கு ஆறாவது பவுலிங் ஆப்ஷன் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும். எனவே இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கண்டு இந்திய அணி சரியான வீரர்களுடன் களம் இறங்க வேண்டியது அவசியம். நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ் ஏற்கனவே தனது இடத்தினை உறுதி செய்துள்ள வேளையில் நிச்சயம் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும்போது ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவரை தேர்வு செய்து விளையாட வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : வெ.இ வீரரின் கோரிக்கைக்கு கடைசிவரை கைகொடுக்காத சச்சின், தாமாக முன்வந்து உதவிய நிறுவனம் – யுவி, ரெய்னா பாராட்டு

அப்படி விளையாடினால் மட்டுமே இந்திய அணியால் ஆறாவது பவுலருடன் களமிறங்க முடியும் என சபா கரீம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? உங்களது கருத்துக்களை பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement