5 டக் 10க்கு ஆல் அவுட்.. 5 பந்தில் முடிந்த போட்டி.. ஆர்சிபி’யை மிஞ்சிய மங்கோலியா மோசமான உலக சாதனை

Mangolia
- Advertisement -

இந்தியாவில் ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உலகம் முழுவதிலும் பல்வேறு கண்டங்களில் குவாலிபயர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஆசிய கண்டத்தின் 2026 டி20 உலகக் கோப்பை குவாலிபயர் சுற்றும் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் இன்று மங்கோலியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதியப் போட்டி நடைபெற்றது.

அப்போட்டி மலேசியாவில் உள்ள பாங்கி நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற சிங்கப்பூர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய மங்கோலியா பள்ளிக் குழந்தைகளை விட படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 ஓவரில் 10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் 5 வீரர்கள் சிங்கப்பூரின் தரமான பந்து வீச்சில் டக் அவுட்டானார்கள்.

- Advertisement -

மோசமான உலக சாதனை:

மற்ற 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். யாருமே 3 ரன்களை கூட தாண்டவில்லை. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் காண்டேபெரல் கன்போல்ட் 2 மற்றும் சுரேன்செட்செக் 2 ரன்கள் எடுத்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோர் (10) பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையை மங்கோலியா சமன் செய்தது.

இதற்கு முன் 2023ஆம் ஆண்டு ஐஸ் ஆஃப் மேன் தீவுகள் அணி ஸ்பெயின் அணிக்கு எதிராக 8.4 ஓவரில் 10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது அந்த சாதனையை மங்கோலியாவும் சமன் செய்துள்ளது. மறுபுறம் நெருப்பாக பந்து வீசிய சிங்கப்பூர் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷா பரத்வாஜ் 6, அக்சர் பூரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 11 ரன்களை துரத்திய சிங்கப்பூருக்கு கேப்டன் மன்ப்ரீத் சிங் டக் அவுட்டானார்.

- Advertisement -

ஆர்சிபி போல:

ஆனால் விலி சிம்ஷன் 6* (2), ரவுள் சர்மா 7* (2) ரன்கள் அடித்து 0.5 ஓவரிலேயே சிங்கப்பூரை 13-1 ரன்கள் எடுக்க வைத்து 115 பந்துகள் மீதம் வைத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். மொத்தத்தில் இப்போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய மங்கோலியா அணி ஆர்சிபி ஐபிஎல் அணியைப் போல மோசமான சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: 94/7 டூ 202/7.. சுப்மன் கில் அணிக்கு தனியாளாக தண்ணி காட்டிய சர்பராஸ் தம்பி முஷீர் கான்.. சதத்துடன் போராட்டம்

குறிப்பாக வரலாற்றில் 49க்கு ஆல் அவுட்டான பெங்களூரு அணி குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்துள்ளது. தற்போது ஆர்சிபி அணியை மிஞ்சும் அளவுக்கு இப்போட்டியில் விளையாடிய மங்கோலியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இது போக ஏற்கனவே அதிகபட்ச ஸ்கோரை (314-3 நேபாளுக்கு எதிராக) வழங்கிய அணியாகவும் மங்கோலியா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement