இந்தியாவில் துலீப் கோப்பை 2024 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. பெங்களூருவில் துவங்கிய அத்தொடரின் முதல் ரவுண்டில் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் மோதின. காலை 9.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியல் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 13 ரன்களில் அவுட்டானார். அதே போல மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 30 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த சர்பராஸ் கான் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் 67-3 எனத் தடுமாறிய அந்த அணிக்கு 3வது இடத்தில் சர்பராஸ் கான் தம்பி முஷீர் கான் நங்கூரமாக விளையாடினார்.
முஷீர் கான் சதம்:
ஆனால் எதிர்ப்புறம் ரிஷப் பன்ட் 7, நிதிஷ் ரெட்டி 0, தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 0, சாய் கிஷோர் 1 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 94-7 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா பி அணி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய முசீர் கான் அரை சதமடித்து போராடினார்.
அவருக்கு டெயில் எண்டரான நவ்தீப் சைனி பொறுமையாக விளையாடி கை கொடுத்தார். அதை பயன்படுத்திய முசீர் கான் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவரை அவுட்டாக்க முடியாமல் இந்தியா ஏ அணி கேப்டன் சுப்மன் கில் திணறினார். அவருக்கு தொடர்ந்து தனியாளாக சவாலை கொடுத்த முஷீர் கான் சதமடித்து இந்தியா பி அணியை தூக்கி நிறுத்தினார்.
சுப்மன் கில் தடுமாற்ற கேப்டன்ஷிப்:
அதனால் தப்பிய இந்தியா பி அணி முதல் நாள் முடிவில் 202-7 ரன்கள் குவித்து ஓரளவு நல்ல துவக்கத்தை பெற்றது. அந்த அணிக்கு முஷீர் கான் 105* (227) ரன்களுடன் களத்தில் அவுட்டாகாமல் சவாலை கொடுத்து வருகிறார். அவருக்கு எதிர்ப்புறம் நவ்தீப் சைனி 29* (74) ரன்கள் குவித்து கை கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: 4, 6, 4.. 82 ரன்ஸ்.. 24/5 என சரிந்த போது தனி ஒருவனாக ருதுராஜ் அணியை மிரட்டி காப்பாற்றிய அக்சர் படேல்
இந்தியா சி அணிக்கு இதுவரை கலீல் அகமது, ஆவேஸ் கான், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். குல்தீப் யாதவ், சிவம் துபே போன்ற நட்சத்திர வீரர்கள் இதுவரை விக்கெட் எடுக்காமல் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே நாளை முசீர் கானை விரைவில் அவுட்டாக்கி இந்தியா பி அணியை 250 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய நிலைக்கு சுப்மன் கில் தள்ளப்பட்டுள்ளார்.