4, 6, 4.. 82 ரன்ஸ்.. 24/5 என சரிந்த போது தனி ஒருவனாக ருதுராஜ் அணியை மிரட்டி காப்பாற்றிய அக்சர் படேல்

Axar Patel
- Advertisement -

இந்தியாவில் செப்டம்பர் 5ஆம் தேதி துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துவங்கியது. அதில் அனந்தபூரில் காலை 9.30 மணிக்கு துவங்கிய முதல் ரவுண்டு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலையிலான இந்தியா சி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணிக்கு துவக்க வீரர்கள் அதர்வா டைட் 4, யாஷ் துபே 10 ரன்களில் அன்சுல் கம்போஜ் வேகத்தில் ஆட்டமிழந்தனர். போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9, தேவ்தூத் படிக்கல் 0 ரன்களில் விஜயகுமார் வேகத்தில் நடையை கட்டினர். அதனால் 24-4 என தடுமாறிய அந்த அணி 100 ரன்கள் தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

- Advertisement -

தனி ஒருவனான அக்சர் படேல்:

அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ரிக்கி புய் 4, கே.எஸ். பரத் 13 ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதனால் 48-6 என தடுமாறிய இந்தியா டி அணிக்கு அக்சர் பட்டேல் 7வது இடத்தில் களமிறங்கி போராடினார். அவருக்கு எதிர்ப்புறம் சரன்ஸ் சிங் 13 ரன்கள் அடித்து கை கொடுத்தார்.

அதை பயன்படுத்தி நங்கூரமாக விளையாடிய அக்சர் படேல் அரை சதமடித்து அசத்தினார். குறிப்பாக 97-8 என தமது அணி தடுமாறிக் கொண்டிருந்த போது 37 ரன்களில் இருந்த அவர் மானவ் சுதர் வீசிய 39வது ஓவரில் 4, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு அரை சதத்தை தொட்டார். மேலும் டெயில் எண்டர்களின் உதவியுடன் அவர் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ருதுராஜ் அணிக்கு சவால்:

அந்த வகையில் தொடர்ந்து தனி ஒருவனாக இந்தியா சி அணிக்கு சவாலை கொடுத்த அக்சர் படேல் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 86 (118) ரன்கள் விளாசி தம்முடைய அணியை ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழந்தார். இறுதியில் அர்ஷ்தீப் சிங் 13 ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய இந்தியா டி அணி முதல் இன்னிங்ஸில் போராடி 164 ரன்கள் குவித்து அவுட்டானது.

இதையும் படிங்க: கண்ணு வேணும்ன்னு கேட்டியாமே.. வாயை விட்டு மாட்டிய ஸ்காட்லாந்து வீரர்.. அடித்து நொறுக்கிய பின் ஹெட் பதிலடி

அந்த வகையில் அக்சர் படேல் மட்டுமே பாதிக்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா டி அணிக்கு கை கொடுத்தார். இந்தியா சி அணிக்கு அதிகபட்சமாக விஜயகுமார் வைசாக் 3, அன்சுல் கம்போஜ் 2, ஹிமான்சூ சௌஹான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து ருதுராஜ் தலைமையிலான சி அணி தங்களுடைய பேட்டிங்கை துவங்கியுள்ளது.

Advertisement