கண்ணு வேணும்ன்னு கேட்டியாமே.. வாயை விட்டு மாட்டிய ஸ்காட்லாந்து வீரர்.. அடித்து நொறுக்கிய பின் ஹெட் பதிலடி

Travis Head
- Advertisement -

ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. எடின்பர்க் நகரில் செப்டம்பர் 4ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவரில் போராடி 154-9 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் பேரிங்டன் 23 மேத்தியூ க்ராஸ் 27 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக சீன் அபோட் 3, சேவியர் பார்ட்லெட் 2, ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா வெறும் 9.4 ஓவரில் ஸ்காட்லாந்தை அடித்து நொறுக்கி 156-3 ரன்கள் குவித்து மிரட்டலாக எளிதான வெற்றி பெற்றது.

- Advertisement -

வாயை விட்ட வீரர்:

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. குறிப்பாக துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 12 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்க விட்டு 80 (25) ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் முதல் 6 ஓவர்களுக்குள் 73 ரன்கள் அடித்த அவர் ஒரு சர்வதேச டி20 போட்டியில் பவர் பிளேவில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

அதே போல முதல் 6 ஓவர்களில் 113-1 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா ஒரு சர்வதேச டி20 போட்டியில் பவர் பிளே ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை படைத்தது. மறுபுறம் ஆஸ்திரேலியாவிடம் தாறுமாறாக அடி வாங்கிய ஸ்காட்லாந்துக்கு அதிகபட்சமாக மார்க் வாட் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் பதிலடி:

இந்நிலையில் இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியர்களை வீழ்த்தி ஆஸ்திரேலியர்களின் ரத்தத்தை பார்க்க விரும்புவதாக ஸ்காட்லாந்து வீரர் மார்க் வாட் கூறினார். குறிப்பாக 2024 20 உலகக் கோப்பையில் போராடியும் கிடைக்காத வெற்றியை இத்தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெறுவோம் என்று அவர் தெரிவித்திருந்தார். இது பற்றி முதல் போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: அடிச்சா சிக்ஸர் மட்டும் தான்.. 91 ரன்ஸ்.. 233 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்த ஹெட்மயர்.. இரட்டை உலக சாதனை

“நாங்கள் ஒரு போட்டியை மட்டும் வெல்லாமல் இந்தத் தொடரை வென்று இந்த வாரத்தின் முடிவில் கொஞ்சம் ரத்தத்தை பார்ப்போம்” என்று கூறினார். அதற்கு போட்டி முடிந்த பின் டிராவிஸ் ஹெட் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “காரில் பயணித்துக் கொண்டிருந்த போது வாட்டின் கருத்தைக் கேட்டு எங்கள் வீரர்களுடன் சிரித்தேன். அப்படியா சரி பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்” எனக் கூறினார். மொத்தத்தில் “என்னோட கண்ணு வேணும்னு கேட்டியாமே” என்ற தமிழ் திரைப்பட வசனம் போல டிராவிஸ் ஹெட் ஸ்காட்லாந்துக்கு செயலால் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement