INA VS MNG: 7 பேர் 0 ரன்.. 49 எக்ஸ்ட்ராஸ்.. அடித்தது 10 ரன்.. ஏசியன் கேம்சில் ஒரே அணிக்கு நடந்த பரிதாபம்

mangolia team
- Advertisement -

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடர் சீனாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் டி20 போட்டிகள் வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த தொடரில் விளையாடுவதற்கு ருதுராஜ் கைக்வாட் தலைமையிலான ஆடவர் இந்திய அணியும் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும் சீனாவுக்கு சென்று தங்களுடைய போட்டிகளுக்கு முன்பாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் கத்துக்குட்டிகளாக கருதப்படும் அணிகள் முதலாவதாக லீக் சுற்றில் மோதின. அதில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தோனேசியா மற்றும் மங்கோலியா மகளிர் அணிகள் விளையாடின. ஹங்கொழு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மங்கோலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தோனேசியா மகளிர் அணி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 187/4 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பரிதாப மங்கோலியா:
அந்த அணிக்கு அதிகபட்சமாக லூஹ் டெவி 62 (48) ரன்கள் எடுக்க மங்கோலியா சார்பில் மெந்த்பேயர் என்சூல் 4 ஓவரில் 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்து சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். அப்படி பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட மங்கோலியா அணியினர் 47 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கினர். அதைத் தொடர்ந்து 188 என்ற கடினமான இலக்கை துரத்திய மங்கோலியா அணிக்கு அதன் வீராங்கனைகள் பள்ளி குழந்தைகளை போன்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர்.

குறிப்பாக அம்களன் புல்கன்சிங் 0, கௌலினா 0, கேப்டன் அரியூன்செட்செக் 0, நமுசுரேன் 0, கன்பட் 0, மெந்த்பேயர் 0, கன்போல்ட் 0, கான்சுக் அனுஜின் 0 என அந்த அணியின் 7 வீராங்கனைகள் டக் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஐசின்கோர்லோ 5 ரன்கள் எடுத்தார். அதனால் 10 ஓவரில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டான மங்கோலியா அணியினர் தாங்கள் கொடுத்த எக்ஸ்ட்ரா ரன்களை கூட எடுக்காமல் 172 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தனர். இதில் அவர்கள் அடித்தது 10 ரன்கள் தான். 4 ஓய்டு மற்றும் 1 லெக்பை சேர்த்து தான் அணியின் ஸ்கோர் 15.

- Advertisement -

மறுபுறம் பேட்டிங் போலவே பவுலிங்கிலும் அசத்தி மெகா வெற்றி பெற்ற இந்தோனேசியா சார்பில் அதிகபட்சமாக ஆன்ட்ரியாணி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 20ஆம் தேதி மீண்டும் அதே மைதானத்தில் நடைபெற்ற ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் டாஸ் வென்ற மங்கோலியா தைரியமாக பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆனால் மீண்டும் சுமாராக பந்துவீச்சு அந்த அணியை அதிரடியாக எதிர்கொண்ட ஹாங்காங் 20 ஓவர்களில் 202/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கேரி சன் 70 (39) ரன்கள் எடுக்க மீண்டும் 36 எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கிய மங்கோலியா சார்பில் அதிகபட்சமாக அரியூன்செட்செக் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 203 ரன்களை துரத்திய அந்த அணிக்கு மீண்டும் 5 வீராங்கனைகள் டக் அவுட்டானார்.

இதையும் படிங்க: 2023 உ.கோ முன் எதிரணிக்கு பலத்தை காட்ட விரும்பல.. அதான் அவரை ஒளிச்சு வைக்கிறோம் – ரோஹித் சர்மாவின் ப்ளான் கருத்து

அதனால் 14.3 ஓவரில் 22 ரன்களுக்கு மங்கோலியாவை ஆல் அவுட்டாக்கி 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹாங்காங் சார்பில் அதிகபட்சமாக அளிசன் சியோ, கேரி சன் 2 விக்கெட்களை எடுத்தனர். மொத்தத்தில் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற 2 போட்டிகளில் 12 டக், 87 எக்ஸ்ட்ரா ரன்களை பதிவு செய்து வினோதம் செய்த மங்கோலியா ஆரம்பத்திலேயே இத்தொடரிலிருந்து வெளியேறியது.

Advertisement