ஒரு தொடர்ல சரியா ஆடலனா கோலியை யாரும் குறை சொல்லாதீங்க கடுப்பான முன்னாள் வீரர் – ஆவேச பேட்டி

Kohli-1
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது டி20 தொடரை தவிர மற்ற அனைத்திலும் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் விராட் கோலியின் பேட்டிங் சொதப்பல்தான் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன்லால் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

Kohli 3

- Advertisement -

விராட்கோலி ஆடுகளத்தில் மிகவும் ஆக்ரோசமாக இருக்கக்கூடிய வீரர். நியூஸிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது கேன் வில்லியம்சனை ஏன் சீண்டினார் என ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியிருந்தார். விராட் கோலி இதற்கு தனது பாணியில் ஆக்ரோஷமாக ஒரு பதிலையும் கொடுத்திருந்தார்.

நடக்காத ஒரு விஷயத்தை பற்றி கேட்டால் அனைவருக்கும் கோபம் வரத்தான் செய்யும். கோலி பதிலளித்த விதமும் சரியே. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்திய அணிக்கு ஆக்ரோசமாக ஆடத் தெரியாது என பலரும் கிண்டல் செய்தனர். இதற்காக பல விமர்சனங்களையும் வைத்தனர். விராட் கோலி இந்திய அணியின் கேப்டனான பிறகு இந்திய அணி ஆக்ரோசமாக மட்டும்தான் விளையாடுகிறது.

Madan lal

ஆனால் தற்போது ஏன் இந்திய அணி இவ்வளவு ஆக்ரோசமாக விளையாடுகிறது என்று விமர்சனம் வைக்கின்றனர்.விராட் கோலியை ஏன் திரும்பத் திரும்ப குறிவைத்து தாக்குகின்றனர் என்று புரியவில்லை. இதையெல்லாம் விராட் கோலி கண்டுகொள்ளத் தேவையில்லை. அவர் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார் .

- Advertisement -

இன்னும் பேட்டிங்கில் தன்னை மெருகேற்றி விட்டால் கோலி ஒரு அற்புதமான வீரராக மீண்டும் தொடரலாம். தொடர்ந்து அவர் ஆக்ரோசமாக ஆட வேண்டும் இவ்வாறு விராட் கோலிக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளார் மதன்லால். மதன்லால் இந்தியனின் ஆலோசனை குழுவின் உறுப்பினராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Kohli-1

கோலியின் ஆக்ரோஷம் புதிதாக இப்போது வரவில்லை. அவரின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் இதே பாணியை கையாண்டு வருகிறார். மேலும் இந்திய அணி வெற்றிபெறும் போது அவரது செயல்பாடு சரி என்றும் தோல்வி அடையும்போது தவறு என்றும் கூறுவது சரியல்ல.

Advertisement