பாகிஸ்தான் நற்பெயரை அழித்த நக்வியிடம்.. எதுக்கு ஜெய்ச்ச இந்தியா போகனும்? கடைமையை செய்ங்க.. மதன் லால்

Madan Lal
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த அவரது கையால் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி தெரிவித்து விட்டது.

அதனால் ஏமாற்றமடைந்த மோசின் இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்? என்பதைப் பார்ப்பதற்காக கையோடு கோப்பையை எடுத்துச் சென்றார். மறுபுறம் ஆசியக் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பையைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணி மைதானத்தில் காத்திருந்தது. இறுதியில் இந்திய அணி வாங்க மறுத்ததால் கோப்பை வழங்கப்படவில்லை ஆசிய கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்தியா எதுக்கு வரனும்:

அதற்காக வருத்தமடையாத இந்திய அணியினர் கையில் கோப்பை இருப்பது போல் கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தனர். இதற்கிடையே தம்முடைய செயலுக்காக பிசிசிஐ நிர்வாகிகளிடம் மோசின் நக்வி மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியாகின. அதே சமயம் கோப்பையை இந்தியாவுக்கு தர முடியாது என்று அவர் மறுத்ததாகவும் செய்திகள் தெரிவித்தனர்.

ஆனால் அதை மறுத்த மோசின் நக்வி இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன், கேட்கவும் போவதில்லை என்று ட்விட்டரில் கூறினார். அத்துடன் இந்தியாவுக்கு கோப்பை வேண்டுமெனில் கேப்டன் சூரியகுமார் துபாயில் இருக்கும் ஆசிய கவுன்சில் அலுவலகத்துக்கு வந்து தமது கையால் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவருடைய இந்த நிலைப்பாட்டை முன்னாள் இந்திய வீரர் மதன் லால் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மதன் லால் விமர்சனம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த விஷயங்கள் நடந்திருக்கக்கூடாது. ரசிகர்கள் முன்னிலையில் அல்லது தொலைக்காட்சியில் இந்திய வீரர்கள் கோப்பையை தூக்கியிருந்தால் நன்றாக இருக்கும். விளையாட்டைப் பற்றி மோசினுக்கு எந்த அறிவும் இல்லை. எப்படி விளையாட்டு விளையாடப்பட வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் வெளியேறிய பின்பும் கூட இந்திய அணி கோப்பையை வெல்வதற்காக காத்திருந்தது”

இதையும் படிங்க: 127க்கு ஆல் அவுட்.. ஆஸியை சொந்த மண்ணில் 2.5 நாளில் ஊதித்தள்ளிய இளம் இந்தியா.. அபாரமான இன்னிங்ஸ் வெற்றி

“எனவே அவர் கோப்பையை மற்றொருவரிடம் கொடுத்து இந்திய அணியிடம் கொடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாத பாகிஸ்தான் வாரியத் தலைவரான அவர் தமது நாடு மற்றும் தன்னுடைய நற்பெயரை அழித்துக் கொண்டுள்ளார். ஆசியக் கவுன்சில் அலுவலகத்திற்கு சென்று சூரியகுமார் ஏன் கோப்பையை வாங்க வேண்டும்? இந்தியா வென்றது. இந்தியா வென்ற கோப்பையை நீங்கள் களத்திலேயே கொண்டாட கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement