சென்னை அணி அதிரடி வீரரின் தந்தை திடீர் மரணம்…ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்…யார் தெரியுமா ?

CSk

இந்த ஐபிஎல் சீசனில் எதிர்பாரா பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை அணி பாவமான நிலையில் உள்ளது.ஏற்கனவே இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் காயம் காரணமாக கேதார் ஜாதவ்,முரளிவிஜய்,சுரேஷ்ரெய்னா ஆகிய அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருகின்னறனர்.

lungi

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளரான லுங்கி நிகிடி ஐபிஎல் போட்டிகளிலிருந்து விளையாடாமல் வெளியேறி தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார்.தென்ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான லுங்கிநிகிடி இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

- Advertisement -

லுங்கிநிகிடியின் தந்தை ஜெரோம் நிகிடி திடீரென்று உயிரிழந்தால் தற்போது தனது தந்தையின் இறுதி சடங்குகளில் பங்கேற்க தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார்.இதனை சென்னை அணியின் நிர்வாகமும் தற்போது உறுதிசெய்துள்ளது. இந்த ஐபிஎல்-இல் லுங்கிநிகிடி சென்னை அணிக்காக 50லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

சென்னை அணியை பொறுத்தவரையிலும் இரண்டாடுகளுக்கு பின்னர் சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்துள்ளது.மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கான இரண்டு போட்டிகளிலுமே அதிரடியாக விளையாடி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

lungi1

- Advertisement -

இரண்டு போட்டிகளிலும் அம்பத்தி ராயுடு மற்றும் பிராவோ,பில்லிங்ஸ் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.இருப்பினும் ரெய்னா,தோனி,ஜடேஜா ஆகியோர் இன்னமும் பார்மில் வராமல் தவித்து வரும் வேளையில் முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாக காயம் மற்றும் பிறகாரணங்களால் அணியிலிருந்து விலகுவது சற்று பின்னடைவே.

Advertisement