சென்னை அணியின் தோல்வியால் சிக்கலை சந்தித்த லக்னோ அணி – அடப்பாவமே இப்படியா ஆகனும்?

CSK Lost to LSG
- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் 29-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில் தற்போது பிளே ஆப் சுற்றி விளையாடும் அணிகள் எவை என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ள வேளையில் நான்காவது இடத்தினை பிடிக்கப்போவது டெல்லியா? அல்லது பெங்களூருவா? என்பது இன்று தெரிந்து விடும்.

CSK Matheesa Pathirana

- Advertisement -

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அடைந்த தோல்வியின் மூலம் லக்னோ அணி இந்த தொடரின் புள்ளிபட்டியலில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் சென்னை அணி நேற்று விளையாடிய போட்டிக்கு முன்னர் புள்ளிபட்டியலில் குஜராத் அணியைத் தொடர்ந்து லக்னோ அணி இரண்டாவது இடத்தில் இருந்தது.

எனவே சென்னை அணி நேற்று விளையாடிய ராஜஸ்தான் அணிக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் எப்படியும் இரண்டாவது இடம் உறுதி என்று நினைத்தது. ஆனால் நேற்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறி லக்னோ அணியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளது.

LSG vs DC

ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளும் 14 போட்டிகளின் முடிவில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளை வைத்திருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் தற்போது ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக லக்னோ அணி பின்னடைவை சந்தித்துள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் குவாலிபயர் 1 போட்டியில் மோதும். அந்த போட்டியில் தோற்றால் கூட தோற்ற அணிக்கு மீண்டும் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும் வாய்ப்பு இருக்கும். ஆனால் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடத்தில் இருக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டனுக்கு டார்கெட் செய்யப்பட்டுள்ள 2 வீரர்கள் – ஜடேஜா லிஸ்ட்ல இல்லையாம்

அந்த போட்டியில் தோற்கும் அணி இந்த தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான். எனவே லக்னோ அணி தற்போது எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதோடு அந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணி டெல்லி அணியுடன் விளையாடப்போகிறதா? அல்லது பெங்களூரு அணியுடன் விளையாடப்போகிறதா? என்பது இன்று தெரிந்துவிடும்.

Advertisement