சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டனுக்கு டார்கெட் செய்யப்பட்டுள்ள 2 வீரர்கள் – ஜடேஜா லிஸ்ட்ல இல்லையாம்

CSK-1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் துவக்கத்திலிருந்தே சரிவை சந்தித்த சென்னை அணியானது லீக் சுற்றுகளின் முடிவில் 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா அறிவிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றது.

CSK vs SRH

- Advertisement -

அதனைத்தொடர்ந்து கேப்டன்சி அழுத்தத்தை தாங்க முடியாமல் மீண்டும் தோனியிடம் கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து தோனி இந்த ஆண்டு எஞ்சியிருந்த போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக தோனி விளையாடுவேன் என்று உறுதி செய்துள்ளதால் அடுத்த ஆண்டு கேப்டனாக விளையாடுவாரா அல்லது சாதாரண வீரராக விளையாடுவாரா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இருப்பினும் தற்போது 40 வயதில் இருக்கும் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னர் 41 வயதை எட்டி விடுவார். இதன் காரணமாக அடுத்த ஆண்டே சிஎஸ்கே அணியில் அவரது கடைசி ஆண்டாக அமையலாம். அதனால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் பெருமளவு இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக மாற இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

stokes 1

அதில் ஒன்று புதிய கேப்டனாக இங்கிலாந்து அணியை சேர்ந்த முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்ஸை தேர்வு செய்ய இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிரடி ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியை பலப்படுத்தும் நோக்கில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதோடு அவர் இங்கிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

- Advertisement -

ஆனால் அடுத்த ஆண்டு நிச்சயம் அவர் ஐ.பி.எல் விளையாட வருவார் என்பதனால் அவரை 12 கோடி ரூபாய் கொடுத்து அவரை கேப்டனாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ஸ்டோக்ஸ் சென்னை அணியால் வாங்கப்படவில்லை என்றால் ருதுராஜ் கெய்க்வாட் தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இதையும் படிங்க : மிஸ் பண்ணிட்டீங்களே ஆர்சிபி ! விக்கெட் எடுப்பதில் உச்சம் தொட்ட யுஸ்வேந்திர சாஹல் – புதிய சாதனை

ஏனெனில் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த பல ஆண்டுகளுக்கு சென்னை அணியுடன் பயணிப்பார் என்பதும் அவரை சுற்றியே அணி கட்டமைக்கப்படும் என்பதனால் நிச்சயம் அவரே சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டனாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement