IPL 2023 : லக்னோ அணிக்கு பாரமாக இருப்பதே ராகுல் தான் – ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் புள்ளிவிவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் நடைபெற்ற 38வது லீக் போட்டியில் பஞ்சாப்பை அதன் சொந்த ஊரில் சரமாரியாக கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய லக்னோ 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் 2வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவர்களில் சரவெடியாக செயல்பட்டு 257/5 ரன்கள் விளாசி ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 54 (24) ஆயுஷ் படோனி 43 (24) மார்கஸ் ஸ்டோனிஸ் 72 (40) நிக்கோலஸ் பூரான் 45 (19) என களமிறங்கிய பெரும்பாலான அபாரமாக பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவித்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட் எடுத்தார். அதைத்தொடர்ந்து 258 என்ற மெகா இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு ஷிகர் தவான் 1, லிவிங்ஸ்டன் 23, சாம் கரண் 21 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் அதர்வா டைட் 66 (36) ரன்களும் சிக்கந்தர் ராசா 36 (22) ரன்கள் எடுத்தும் 19.5 ஓவரில் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

லக்னோவின் பாரம்:
அதனால் பெரிய வெற்றி பெற்ற லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்கள் சாய்த்தார். முன்னதாக கடந்த போட்டியில் குஜராத்துக்கு எதிராக வெறும் 136 ரன்களை துரத்தும் போது கேப்டன் கேஎல் ராகுல் சுயநலமாக 68 (61) ரன்கள் குவித்து கடைசி வரை அதிரடியை துவங்காமல் கடைசி ஓவரில் அவுட்டானதால் நிச்சயம் அடித்தாக வேண்டும் என்ற அழுத்தத்தில் மார்க்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி போன்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்ததால் கையிலிருந்த லக்னோவின் பற்றி 7 ரன்கள் வித்தியாசத்தில் நழுவி போனது.

அந்த நிலையில் இந்த போட்டியில் வழக்கம் போல மீண்டும் தடவலாக பேட்டிங் செய்த ராகுல் 12 (9) ரன்களை 133.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து ஆரம்பத்திலேயே அவுட்டானார். கடைசியில் அதுவே அதிர்ஷ்டத்தை போல கடந்த போட்டியில் அவுட்டான அதே ஸ்டோனிஸ், படோனி போன்ற பேட்ஸ்மேன்கள் இம்முறை அழுத்தத்தை விரட்டி அடித்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அபார வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் கடந்த போட்டியின் தோல்விக்கும் இப்போட்டியின் வெற்றிக்கும் ராகுல் தான் காரணம் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமானதாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த சீசனில் லக்னோ இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 8இல் 4 போட்டிகளில் கேஎல் ராகுல் நிலைத்து நின்று விளையாட முயற்சித்து 20 ரன்களுக்கு மேலே எடுத்துள்ளார். அப்படி அவர் 20 ரன்களுக்கு மேல் எடுத்த போட்டிகளில் லக்னோ முறையே 127/5, 159/8, 154/7, 128/7 என 160க்கும் குறைவான ஸ்கோரையே எடுத்துள்ளது. அந்த 4 போட்டிகளில் லக்னோ 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

ஆனால் அதே ராகுல் ஆரம்பத்திலேயே 20 அல்லது அதற்கும் குறைவான ரன்களில் அவுட்டான எஞ்சிய 4 போட்டிகளில் லக்னோ முறையே 193/6, 205/7, 213/9, 257/5 என குறைந்தது 190க்கும் மேற்பட்ட பெரிய ஸ்கோரை அடித்துள்ளது. இந்த 4 போட்டிகளில் லக்னோ 3 வெற்றிகளை பெற்று 1 தோல்வியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இதிலிருந்து கேப்டனாக முன்னின்று தொடக்க வீரராக அடித்து நொறுக்கிய கேஎல் ராகுல் தனது தடவல் பேட்டிங்கை பயன்படுத்தி அதிக பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களுக்கு மேல் குவிக்கும் போது லக்னோ பெரிய ரன்களை எடுக்க முடியாமல் அதிக தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஆனால் அவர் ஆரம்பத்திலேயே அவுட்டானால் லக்னோ பெரிய ரன்களை குவித்து அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க:LSG vs PBKS : பஞ்சாப்க்கு எதிரான அதிரடிக்கு காரணம் இதுதான். அதோட எனக்கு கொஞ்சம் பொறுப்பும் இருக்கும் – ஸ்டாய்னிஸ் பேட்டி

இதிலிருந்து முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி லக்னோ அணிக்கு அதன் கேப்டன் கேஎல் ராகுல் தான் மிகப்பெரிய பாரமாக இருப்பது தெளிவாக தெரிகிறது. இதைப் பார்க்கும் எதிரணி ரசிகர்கள் அடுத்து வரும் போட்டிகளில் லக்னோவை வெல்ல வேண்டுமெனில் ராகுலை அவுட்டாக்கமால் இருக்க வேண்டுமென தங்களது அணிக்கு ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.

Advertisement