தம்பி 27 கோடி’ப்பா.. 3 சொதப்பலை செய்த ரிஷப் பண்ட்.. ராகுல் போல திட்ட ஆரம்பித்த லக்னோ ஓனர்

Rishabh Pant LSG
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற நான்காவது போட்டியில் லக்னோவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி போராடி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 75, மிட்சேல் மார்ஷ் 72 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லிக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அடுத்ததாக விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே கேப்டன் அக்சர் படேல், டு பிளேஸிஸ், ஜேக் பிரேசர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 60-5 என சரிந்த டெல்லி தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது அதிரடியாக விளையாடிய அசுடோஸ் சர்மா 66* (31) ரன்கள் விளாசி தெறிக்க விட்டார்.

- Advertisement -

டெல்லி மிரட்டல்:

அவருடன் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 34 (22) விப்ராஜ் நிகாம் 39 (15) ரன்கள் விளாசி 19.3 ஓவரில் டெல்லி அற்புதமான வெற்றியை பெற உதவினார்கள். அதன் காரணமாக லக்னோ கையில் கிடைத்த வெற்றியை கோட்டை விட்ட பரிதாபமாக தோற்றது. முன்னதாக கடந்த வருடம் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் ஒரு போட்டியில் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமானதால் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா பொதுவெளியில் திட்டியதை மறக்க முடியாது.

அதனால் அந்த அணியிலிருந்து அமைதியாக மரியாதையுடன் வெளியேறிய ராகுல் டெல்லிக்காக விளையாட தேர்வாகியுள்ளார். மறுபுறம் டெல்லிய அணியில் விளையாடி வந்த ரிஷப் பண்ட் இம்முறை 27 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு லக்னோ அணிக்கு வாங்கப்பட்டுள்ளார். அங்கே கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் தனது முதல் போட்டியிலேயே 6 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டானார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் சொதப்பல்:

அதனால் ஐபிஎல் தொடரில் 2வது அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டான கேப்டன் என்ற விவிஎஸ் லக்ஷ்மன் (2008), ரிக்கி பாண்டிங் (2013) சாதனையையும் ரிஷப் பண்ட் சமன் செய்தார். அதே போல கடைசி ஓவரில் லக்னாவுக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே மோகித் சர்மாவை ஸ்டம்ப்பிங் செய்யும் வாய்ப்பையும் தவற விட்ட அவர் வெற்றியையும் தவற விட்டு பெரிய சொதப்பலை செய்தார். ஏனெனில் அதைப் பயன்படுத்திய மோகித் சர்மா சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை அசுடோஸ்க்கு கொடுத்தார்.

அதைப் பயன்படுத்தி அசுடோஸ் போட்டியை முடித்தார். மேலும் டெல்லி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெல்லும் அளவுக்கு ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் மோசமாக இருந்தது. அப்படி 3 சொதப்பலை செய்த ரிஷப் பண்ட்டை போட்டி முடிந்ததும் ராகுலை போலவே லக்னோ உரிமையாளர் திட்டாத குறையாக பேசினார்.

இதையும் படிங்க: இதை என் குரு தவானுக்கு டெடிகேட் பண்றேன்.. லக்னோவை சாய்க்க அந்த பாடம் ஹெல்ப் பண்ணுச்சு.. அசுடோஸ் பேட்டி

அவரிடம் “சும்மா இல்லப்பா 27 கோடி” என்று சஞ்சீவ் கூறியிருக்கலாம் என ரசிகர்கள் கணிக்கிறார்கள். மேலும் 16 கோடிக்கு சொதப்பிய ராகுலை திட்டிய ஓனர் 27 கோடி ரிஷப் பண்ட்டை முதல் போட்டியிலேயே சொதப்பினால் திட்டாமல் விடுவாரா? என்றும் ரசிகர்கள் கலாய்கின்றனர். அதே சமயம் பிசினஸ்மேனான இவர் இப்படி திட்டுவதை நிறுத்தும் வரை லக்னோ வெல்லாது என்றும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement