என்னது நாங்க ரோஹித் சர்மாவை வாங்கப்போறோமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த – லக்னோ அணியின் ஓனர்

Sanjeev
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேடிங் செய்யப்பட்ட ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அணியில் உள்ள மற்ற வீரர்கள் மத்தியிலுமே பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

ரோஹித் சர்மாவை லக்னோ அணி வாங்குகிறதா? :

இதன் காரணமாக ரோகித் சர்மா மும்பை அணியின் நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மும்பை அணியில் இருந்து வெளியேறும் ரோகித் சர்மா மெகா ஏலத்தில் கலந்து கொள்வார் என்றும் அந்த மெகா ஏலத்தில் அவரை தேர்ந்தெடுக்க பல்வேறு அணிகளும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் லக்னோ அணியின் நிர்வாகம் கே.எல் ராகுலை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதில் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் என்றும் அதற்காக ரோஹித் சர்மாவை எத்தனை கோடிக்கு வேண்டும் என்றாலும் விலைக்கு வாங்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா ரோஹித் சர்மாவை தாங்கள் வாங்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து சில உண்மை கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா மெகா ஏலத்தில் பங்கு பெறுவார் என்பது உங்களுக்கோ அல்லது எனக்கோ அல்லது யாருக்காவது நிச்சயமாக தெரியுமா? யாருக்கும் தெரியாது.

- Advertisement -

அதனால் நாங்கள் அவரை வாங்க இருக்கிறோமா? என்ற பேச்சு தேவையற்றது. ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோஹித் சர்மா வெளியேறி ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் எங்களுடைய ஏல மதிப்பின் அடிப்படையில் அவரை நாங்கள் வாங்குவோமா என்பது தெரியும். ஏனெனில் ஒரு வீரருக்காக 50 கோடியை செலவிட முடியாது. அவருக்கு 50 சதவீத தொகையை கொடுத்து விட்டால் மற்ற 22 வீரர்களை நாங்கள் வாங்க முடியாமல் போக நேரிடும்.

இதையும் படிங்க : சச்சினா? தோனியா? யாரு பெஸ்ட்? சில நொடி மவுனத்திற்கு பிறகு வெங்கடேஷ் ஐயர் அளித்த பதில் – விவரம் இதோ

எனவே அணியின் பர்ஸ் மதிப்பை பொறுத்து தான் எந்த ஒரு வீரரையும் நாங்கள் தேர்வு செய்ய முடியும். நிச்சயம் ரோஹித் சர்மா ஒரு சிறந்த வீரர், ஒரு சிறந்த கேப்டன் தான். அவரை வாங்குவது எங்களுக்கு விருப்பம் தான். ஆனாலும் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறதோ? அணிக்கு என்ன தேவையோ? அதை பொறுத்து தான் எந்த ஒரு வீரரையும் வாங்க முடியும் என்று சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement