தோனி மாதிரி லீடர பாத்ததில்ல.. அவரை மேட்ச் வின்னரை மாற்றி.. என் பேரன்கிட்ட பேசுனாரு.. லக்னோ ஓனர் வியப்பு

Sanjiv Goenka
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த ஜாம்பவான் கேப்டனாகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் போற்றப்படுகிறார். இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக அவர் சாதனை படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ள அவர் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் சென்னை அணிக்காக வென்றுள்ளார்.

2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விடைபெற்ற அவர் இப்போதும் ஐபிஎல் தொடரில் 42 வயதில் அசத்தலாக விளையாடி வருகிறார். அவர் விளையாடுவதை பார்க்க இந்தியா முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரள்வது வழக்கமாகி வருகிறது. எடுத்துகாட்டாக மும்பையில் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடினால் அங்குள்ள மைதானத்தில் பெரும்பாலான ரசிகர்கள் அவருக்காக மஞ்சள் உடை அணிந்து ஆதரவு தருகிறார்கள்.

- Advertisement -

என்றும் தல தோனி:

இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் தோனிக்காக லக்னோ மைதானத்தை மஞ்சள் படையை சேர்ந்த ரசிகர்கள் சூழ்ந்திருந்ததாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கே தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எம்.எஸ். தோனி போன்ற லீடரை நான் பார்த்ததில்லை. அவருடைய சிந்தனை, அணுகுமுறை ஆகியவை வித்தியாசமானது”

“இன்றைய நாளிலும் அவர் தன்னை மறு சீரமைத்து தம்முடைய அணிக்காக உத்வேகத்தை கொடுக்கும் வகையில் விளையாடுவதை பார்ப்பது அற்புதமானது. மதீஸா பதிரனா குழந்தையைப் போன்ற பவுலராக இருந்தார். அவரை தோனி எங்கே பார்த்து கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. தற்போது அவரை தோனி மேட்ச் வின்னராக உருவாக்கியுள்ளார். அவருக்கு எப்படி தன்னுடைய வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும்”

- Advertisement -

லக்னோ ஓனர் வியப்பு:

“தோனியிடம் பேசும் போதெல்லாம் அவரிடம் நான் எதையாவது கற்றுக் கொள்வேன். லக்னோவில் தோனி விளையாடும் போதெல்லாம் எங்கள் அணியின் ஜெர்சியை விட சிஎஸ்கே ஜெர்சி தான் அதிகமாக தெரியும். எனக்கு கிரிக்கெட்டைப் பற்றி ஆர்வம் கொண்ட 11 வயது பேரன் இருக்கிறார். 5 – 6 வருடங்களுக்கு முன்பாக அவருக்கு கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி தோனி கற்றுக் கொடுத்தார்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய மண்ணில் கவாஸ்கருக்கு அடுத்து மாபெரும் சாதனையை நிகழ்த்த விராட் கோலிக்கு – காத்திருக்கும் வாய்ப்பு

“அவரிடம் அதிகப்படியான கேள்விகளை கேட்ட என்னுடைய பேரனிடம் “அவரை விடு” என்று சொன்னேன். அதற்கு “குழந்தையை விடுங்கள் கேட்கட்டும்” என்று என்னிடம் தோனி சொன்னார். பின்னர் குழந்தையிடம் தோனி ஒன்றரை மணி நேரம் பேசினார். அதில் நீங்கள் மற்றவரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம். அதனாலேயே அவர் தோனியாக இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement