லக்னோவுக்கு அதிர்ஷ்டம் ரொம்பவே குறைவு, கண்டமே இந்த இடத்துல தான் காத்திருக்கு – எதனால் தெரியுமா?

- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை நகரில் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இம்முறை குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்கும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அதனால் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முன்பை விட இருமடங்கு போட்டி காணப்பட்ட நிலையில் நிறைய ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பையும், சென்னையும் தொடர் தோல்விகளால் ஆரம்பத்திலேயே முதல் 2 அணிகளாக லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு எதிர்பாராத திருப்பமாக அமைந்தது.

LSG vs GT Preview

- Advertisement -

இருப்பினும் இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ஆரம்பம் முதலே தேவையான வெற்றிகளை பெற்றதால் டாப் 4 இடங்களை பிடித்து வந்தன. அதில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் அட்டகாசமாக செயல்பட்ட குஜராத் 14 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்று முதல் சீனிலேயே முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு சென்றது.

லக் குறைவான லக்னோ:
அதேபோல் 2-வது இடத்திற்கு வரலாற்றின் முதல் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகளிடையே போட்டி நிலவியது. அதில் இவ்விரு அணிகளுமே 14 போட்டிகளில் தலா 9 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தலா 14 புள்ளிகளை பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. ஆனாலும் சென்னைக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் வென்ற ராஜஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் அதுவும் வெறும் +0.047 புள்ளிகள் என்ற நூலிழையில் 2-வது இடத்தில் இருந்த லக்னோவை முந்தி 2-வது இடத்தைப் பிடித்தது.

LSG vs RR

ஆனால் முதல் 2 இடங்களை பிடித்தால் பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் களமிறங்கி ஒருவேளை தோல்வியடைந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பாக எலிமினேட்டர் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பை குவாலிபயர் 1 போட்டி பெற்றுள்ள நிலையில் அதிர்ஷ்டம் இன்மையால் கோட்டைவிட்ட லக்னோ 3-வது இடத்தை பிடித்துள்ளது. இறுதியில் 4-வது இடத்திற்கு டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளிடையே கடும் போட்டி காணப்பட்ட நிலையில் தனது கடைசி போட்டியில் மும்பையிடம் வீழ்ந்த டெல்லி பிளே ஆப் வாய்ப்பை கோட்டை விட்டது. அதனால் அதிர்ஷ்டம் மற்றும் மும்பையின் மாபெரும் உதவியுடன் 16 புள்ளிகளைப் பெற்ற டுப்லஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு 4-வது இடத்தைப் பிடித்தது.

- Advertisement -

கண்டமே பிளே ஆஃப்:
இதை அடுத்து பிளே ஆப் சுற்றில் மே 24இல் நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடித்த குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. மே 25இல் அதே மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த 2 நாட்களுமே கொல்கத்தா நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் இந்த 4 அணிகளுமே கலக்கமாக காணப்படுகின்றன.

LSG vs GT

1. அதில் ஏற்கனவே குறைவான அதிர்ஷ்டம் கொண்ட லக்னோ மேலும் கலக்கமாக காணப்படுகிறது என்றே கூற வேண்டும். ஏனெனில் மழையை தாண்டி பெங்களூருவை தோற்கடித்து அதன்பின் குவாலிபயர் 1 போட்டியில் வெற்றிபெறும் அணியை குவாலிபயர் 2 போட்டியில் தோற்கடித்தால் மட்டுமே அந்த அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.

- Advertisement -

2. அதைவிட பிளே ஆப் சுற்றில் தன்னுடன் தகுதி பெற்றுள்ள எஞ்சிய 3 அணிகளுக்கு எதிராக இந்த வருட லீக் சுற்றில் லக்னோ ஒருமுறைகூட வென்றதே கிடையாது என்பது ஆச்சரியப்படும் அம்சமாக உள்ளது.

3. ஆம் தன்னைப் போலவே புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத்துக்கு எதிராக முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற லக்னோ அந்த அணியுடன் 2-வது முறையாக மோதியபோது 82 ரன்களுக்கு சுருண்டு 62 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி பெற்றது.

- Advertisement -

4. அதேபோல் ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்ட லக்னோ 2-வது முறையாக மோதியபோது 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மேலும் பெங்களூருவுக்கு எதிராக லீக் சுற்றில் 1 முறை மோதிய போட்டியிலும் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதையும் படிங்க : சாதித்து காட்டிய பழக்கடை வியாபாரி மகன் – நிச்சயம் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார், நெகிழும் இளம் வீரரின் தந்தை

5. இதில் மேலும் ஆச்சரியமாக லக்னோ விளையாடிய 14 போட்டிகளில் பெற்ற 9 வெற்றிகளை தவிர எஞ்சிய 5 தோல்விகள் மேற்குறிப்பிட்ட வகையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள எஞ்சிய 3 அணிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டதாகும். எனவே இந்த அணிகளை பிளே ஆப் கண்டத்தில் தோற்கடித்தால் மட்டுமே கேஎல் ராகுல் தலைமையில் முதல் சீசனிலேயே லக்னோ சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement