- Advertisement -
ஐ.பி.எல்

வெறும் 2 ரன்ஸ்.. ராஜஸ்தான் கையில் வெற்றியை கடைசி 3 ஓவரில் பறித்த லக்னோ.. 2வது த்ரில்லர் சாதனை வெற்றி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்பூரில் 36வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவரில் 180-5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 66, ஆயுஷ் படோனி 50, அப்துல் சமத் 30* ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹசரங்கா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் 14 வயதில் அறிமுகமாகி அசத்திய சூரியவன்சி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 34 (20) ரன்களை விளாசி நல்ல துவக்கத்தைக் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த நிதீஸ் ராணா 8 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

ராஜஸ்தான் போராட்டம்:

அதற்கடுத்தக்காக வந்த கேப்டன் ரியான் பராக் அதிரடி காட்டிய நிலையில் மறுபுறம் நிதானத்தை காட்டிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை கடந்து ராஜஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் 17 ஓவரில் 156/2 என்ற நல்ல நிலையில் இருந்த ராஜஸ்தான் கண்டிப்பாக வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது 18வது ஓவரின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலை 74 (52) ரன்களில் காலி செய்த ஆவேஷ் கான் கடைசி பந்தில் ரியான் பராக்கை 39 (26) ரன்னில் அவுட்டாக்கினார்.

அதோடு நிற்காத அவர் கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் தேவைப்பட்ட போது ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயரை 12 (7) ரன்னில் காலி செய்தார். இறுதியில் துருவ் ஜுரேல் 6*, சுபம் துபே 3* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ராஜஸ்தானை 178/5 ரன்களுக்கு கட்டுப்படுத்திய லக்னோ 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

த்ரில் வெற்றி:

இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் வெறும் 1 அல்லது 2 ரன் வித்தியாசத்தில் 2வது அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை லக்னோ சமன் செய்துள்ளது. லக்னோ, மும்பை, சென்னை, பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக தலா 3 முறை 1 அல்லது 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளன. அதனால் 8 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ள லக்னோ புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க: அவங்க குருட்டுத்தனமா அடிக்கல.. டெல்லியை சாய்த்து குஜராத் டேபிள் டாப்பராக இதான் காரணம்.. கில் பேட்டி

அந்த அணிக்கு ஆவேஷ் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் ராஜஸ்தான் 8 போட்டிகளில் 6வது தோல்வியை சந்தித்தது. கடந்த போட்டியில் கடைசிப் ஓவரில் 9 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்ற ராஜஸ்தான் இந்தப் போட்டியிலும் அதே போல தோற்றுள்ளது.

- Advertisement -