ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை தொட்டுள்ளது. இந்த முதல் வாரத்தில் இதுவரை நடந்த ஏறக்குறைய அனைத்து போட்டிகளும் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு பரபரப்பான திரில்லர் தருணங்களை விருந்து படைத்தது. இந்த தொடரில் சென்னை, மும்பை உள்ளிட்ட ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகள் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து இந்த வருட ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளன. மறுபுறம் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒருசில அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வெற்றி நடை போடத் தொடங்கியுள்ளன.
கலக்கும் டைட்டன்ஸ்:
இந்த தொடரில் புனே நகரில் நேற்று நடைபெற்ற 10-வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171/6 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி பட்டைய கிளப்பிய இளம் இந்திய வீரர் சுப்மன் கில் வெறும் 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார்.
அதை தொடர்ந்து 172 என்ற இலக்கை துரத்திய டெல்லி அணியை ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக பந்துவீசிய குஜராத் தனது கட்டுக்குள் வைத்தது. அந்த அணியில் கேப்டன் ரிஷப் பண்ட் 29 பந்துகளை 43 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 157/9 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய லாக்கி பெர்குசன் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
கிரிக்கெட் காலத்தில் லிப் லாக்:
இந்த வெற்றியால் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி தனது முதல் சீசனின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களில் உள்ளது. முன்னதாக இந்த போட்டியில் 172 ரன்களை துரத்திய டெல்லி 4-வது ஓவரின் முடிவில் 32/1 என்ற நிலையில் வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருந்ததால் அதை மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் மிகுந்த முனைப்புடன் கவனித்து வந்தார்கள். ஆனால் அந்த தருணத்தில் மைதானத்தின் ஒரு பகுதியில் ஒரு காதல் ஜோடி இந்தப் போட்டியைப் பற்றி கவலைப்படாமல் பொது இடமென்றும் பாராமல் பொழுது போக்க வந்ததாக நினைத்துக் கொண்டு முத்தம் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
அதுவும் அருகே பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்த அந்த ஜோடி உதட்டோடு உதட்டை வைத்து லிப் கிஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை கவனித்த கேமராமேன் உடனடியாக கேமராவை அவர்களின் பக்கம் திருப்பியதால் மைதானத்தில் இருந்த மிகப் பெரிய திரையிலும் தொலைகாட்சியிலும் அவர்களின் சேட்டைகள் அம்பலமானது. ஆனால் முத்தம் கொடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த ஜோடி அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒரு சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் கேமராமேன் போட்டியின் பக்கம் தனது கவனத்தையும் கேமராவையும் திருப்பினார்.
Me to Cameraman:-
Ye to nice hai jee#ipl #kiss #kissinipl#cameraman pic.twitter.com/IOxcn0IaTM— Prayag Sharma (@ptprayagsharma) April 2, 2022
Kiss cam feature ipl pic.twitter.com/4Fwmf6MS7q
— shrey (@Harvyinspector) April 2, 2022
Kiss Cam ? In IPL ? Great Going Guys 😂😂😂😂, Cameraman 😂😂 #DCvsGT pic.twitter.com/VEr54yFs2H
— Smith (@Odinkabaap) April 2, 2022
கலாய்க்கும் ரசிகர்கள்:
ஆனால் அதை பார்த்த ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் விதவிதமாக கலாய்க்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக இதுவரை கல்யாணம் ஆகாமல் காதலியும் கிடைக்காமல் காய்ந்த மாடுகளாக சுற்றி வரும் சிங்கில்ஸ் எனப்படும் இளம் காளையர்கள் “நாங்க ஏற்கனவே எதுவும் கிடைக்காமல் தான் மனதை தேற்றுவதற்காக கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க வருகிறோம், இங்கும் வந்து ஏன்டா கடுப்பேத்தறாங்க” என்பது போல் கடுப்பான கமெண்ட்டுகளை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : மெகா சிக்ஸர் அடித்து கேமரா மேன் மண்டைய பதம் பார்த்த இளம் இந்திய வீரர் – ரவி சாஸ்திரி பாராட்டு
இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் வாழ்க்கையில் எத்தனையோ ஐபிஎல் போட்டிகள் வரும் போகும் ஆனால் இதுபோன்ற ஐபிஎல் போட்டிகள் எப்போதும் மறக்க முடியாது என்பது போல் இந்த தருணத்தை படம் பிடித்தாய் கேமராமேனுக்கு நன்றி எனவும் கலாய்க்கிறார்கள். மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் கால்பந்து தொடரின் போது கேமராவை பார்த்தால் ஒருசில காதல் ஜோடிகள் முத்தம் கொடுத்து எஞ்சிய ரசிகர்களை மகிழ்விப்பார்கள். எனவே அதுபோன்ற அற்புதமான முறையை ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்த வேண்டும் என இதன் வாயிலாக பல ரசிகர்கள் கேட்கக் தொடங்கியுள்ளனர்.