இந்திய அணிக்கு எதிராக 2019 செமிபைனல் மேட்ச் தான் நான் விளையாடியதில் க்ரேஸியஸ்ட் மேட்ச் – நியூசி வீரர் பேட்டி

Boult
- Advertisement -

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டியை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். அந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என்று கூறுவதைவிட, மழைதான் மிகச் சிறப்பாக விளையாடியது என்று கூறுவதே சரியாக இருக்கும். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொருத்தவரை 240 ரன்கள் என்ற இலக்கானது மிகக் குறைவானதாகவே பார்க்கப்பட்டது. ஆனால் முதல் பாதி முடிந்ததும் மழை தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்ததால் இரண்டாவது இன்னிங்ஸ் அடுத்த நாளிற்கு ஒத்திவைக்கப்பட்டது.

indvsnz

- Advertisement -

போட்டி ஒத்திவைக்கப்பட்ட அன்றைய இரவில் தன்னுடைய மனநிலைமை எப்படி இருந்தது என்பதைப் பற்றி தெரிவித்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சளரான லோக்கியூ ஃபர்குயூசன். இதுகுறித்து பேசிய அவர், நான் விளையாடிய அதிசயமான போட்டி என்றால் அது அந்த போட்டியாகத்தான் இருக்கும். ஏனெனில் அந்த போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. நாங்கள் அடித்திருந்த 239 ரன்களே போதுமானது என்று நாங்கள் நினைத்தாலும், இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அது ஈடானதாக இருக்காது என்றும் எங்களுக்கு தெரிந்தே இருந்தது.

இதை நினைத்துக் கொண்டே அன்றைய இரவில் நாங்கள் உறங்கச் சென்றுவிட்டோம். அப்போது என்னுடன் என் தோழியும் தங்கி இருந்தாள். நாங்கள் இருவரும் அந்த போட்டியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, அவள் என்னிடம் பதட்டமாக இருக்கிறீரா என்ற கேள்வியைக் கேட்டாள். அதற்கு பதிலளித்த நான், இந்த சூழ்நிலையில் நாங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை. ஏனெனில் நாங்கள் ஏற்கனவே எங்களால் முடிந்த ரன்களை அடித்து விட்டோம்.

Lockie Ferguson

இதற்கு மேல் இந்திய அணிக்கு தான் அழுத்தம் அதிகமாக இருக்குமென்று அவளிடம் கூறினேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த போட்டியின்போது முதல் நாள் பெய்த மழையால் அடுத்த நாளன்று மைதானத்தின் தன்மை முழுவதுமாக மாறி இருந்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவிலேய வீழ்த்தினர்.

kohli

நடு வரிசையில் களமிறங்கிய தோணியும், ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு நாள் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த தொடரில் 21 விக்கெட்டுகள் வீழ்த்திய லாக்கியூ ஃபர்குயூசன் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியிருந்தார்.

Advertisement