இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 28-ஆம் தேதி துவங்கி மே 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தொடருக்கான ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் :
இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சில வீரர்கள் காயம் காரணமாகவும், சில வீரர்கள் சொந்த காரணங்களை முன்வைத்தும் இந்த தொடரில் இருந்து விலகி வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே சி.எஸ்.கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சேர்ந்த மிட்சல் ஸ்டார்க் (முதல் சில ஆட்டங்கள்) ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியிருந்த வேளையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பின்னடைவு ஏற்படுத்தும் விதமாக ஒரு நட்சத்திர வீரர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடி வந்த நியூசிலாந்து அணியை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன் இந்த 2026 ஐபிஎல் தொடரின் முதல் ஏழு போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் யாதெனில் : அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அதே வேளையில் அவரது மனைவிக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது.
இதையும் படிங்க : மிட்சல் ஸ்டார்க்கும் முதல் சில போட்டிகள் டெல்லி அணிக்காக விளையாட மாட்டார்.. வெளியான தகவல் – என்ன காரணம்?
இதன் காரணமாகவும் மனைவியுடனும், குழந்தையுடனும் நேரத்தை செலவிட விரும்பிய பெர்குசன் இந்த முடிவை கையில் எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதோடு முதல் 7 போட்டிக்கு பின்னர் இந்த தொடரின் பிற்பாதியில் அவர் பஞ்சாப் அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.



