அடுத்த போட்டியிலும் இதுதான் நடக்கும். இந்திய அணிக்கு வார்னிங் கொடுத்த – வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ்

Litton-Das
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி ஏற்கனவே தோல்வியை சந்தித்த வேளையில் நேற்று டாக்கா மைதானத்தில் முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி வங்கதேச அணியிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை இழந்துள்ளது.

IND vs BAN Rohit Sharma Liton Das

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் குவித்தது. பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் மட்டுமே குறித்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பங்களாதேஷ் அணி பெற்ற வெற்றி குறித்து பேசியிருந்த அந்த அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் கூறுகையில் : நான் கேப்டன் பொறுப்பை ஏற்ற பின்னர் நடைபெற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் 240 முதல் 250 ரன்கள் வரை அடித்தால் நிச்சயம் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம்.

Mehidy Hasan and Mahmudullah

ஆனால் மெஹதி ஹாசன் மற்றும் முகமதுல்லா ஆகிய இருவரும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அதற்கும் மேல் எங்களை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர். இந்த போட்டியின் இடையே அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுக்கான வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு பவுலராக இருந்தும் இந்திய அணிக்கு எதிராக நான் சதமடிக்க இதுவே காரணம் – மெஹதி ஹாசன் பேட்டி

அதே வேளையில் பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் எங்களால் வெற்றியும் பெற முடிந்தது. இந்த வெற்றியோடு நாங்கள் எங்களது பயணத்தை நிறுத்தப் போவதில்லை. நிச்சயம் அடுத்து வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் எங்களது குறி வெற்றி மட்டுமே என்று இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் லிட்டன் தாஸ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement