பர்த்டே ஸ்பெஷல் : அழுத்தத்திற்கு அஞ்சாமல் மிகச்சிறந்த ஃபினிஷராக – தல தோனி படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்

MS Dhoni 2011 World Cup SIx
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ஜூலை 7ஆம் தேதி தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராஞ்சி போன்ற பிரபலமில்லாத ஊரில் பிறந்து 2004இல் அறிமுகமாகி 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற உலக சாதனை படைத்துள்ள அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பு கொடுத்து இன்றைய வளமான வருங்காலத்தை கட்டமைத்தவர் என்றே சொல்லலாம். மேலும் விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாக விளையாடி பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற இப்போதிருக்கும் நிலைமை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து கீப்பிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார்.

dhoni 2013 Champions Trophy World Cup

- Advertisement -

முன்னதாக ஆரம்ப காலங்களில் டாப் ஆர்டரில் விளையாடிய தோனி கேப்டனாக பொறுப்பேற்றதும் இளம் வீரர்களுக்கு தன்னுடைய இடத்தை கொடுத்து அணியின் நலனுக்காக மிடில் ஆர்டரில் விளையாடினார். பொதுவாகவே அழுத்தமான மிடில் ஆர்டரில் விளையாடுவது மிகப்பெரிய சவால் என்ற சூழ்நிலையில் பெரும்பாலும் நங்கூரமாக நின்று கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்லும் ஸ்டைலை கொண்ட தோனி தோற்கவிருந்த போட்டிகளில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததால் மிகச் சிறந்த ஃபினிஷராக போற்றப்படுகிறார்.

குறிப்பாக ஃபினிஷிங் கலையை ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவன் அறிமுகப்படுத்தினார் என்றால் அதை தோனி உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்தியவர் என்றே சொல்லலாம். அவருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் படைத்துள்ள சில முக்கிய சாதனைகளை பற்றி பார்ப்போம்:

Dhoni 1

1. நம்பர் 6 ராஜா: ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை 50க்கும் மேற்பட்ட சராசரியில் குவித்த ஒரே வீரராக உலக சாதனை படைத்துள்ள தோனி விளையாடுவதற்கு மிகவும் அழுத்தமான 6வது இடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அந்த இடத்தில் மட்டும் 4164 ரன்களை 47.31 என்ற சராசரியில் குவித்த அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவன் 3000 ரன்களுடன் 2வது இடத்திலும் உள்ளார்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் 5 – 11 வரையிலான இடங்களிலும் அதிக ரன்கள் அடித்த வீரராக தோனி முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் ஆண்ட்ரூ சைமன்ஸ் (3590) 3வது இடத்தில் ஸ்டீவ் வாக் (3524) உள்ளனர்.

Dhoni

2. அதிக நாட் அவுட்: பொதுவாக அழுத்தமான போட்டிகளில் கடைசி வரை நின்று வெற்றி பெற வைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 83 போட்டிகளில் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து தோனி வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். 2 மற்றும் 3வது இடத்தில் ஜிம்பாப்வே வீரர் ப்ரோஸ்பர் உட்செயா (48) மற்றும் வங்கதேசத்தின் முகமதுல்லா (47) ஆகியோர் உள்ளனர்.

Dhoni

3. அதிக சராசரி: ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரியை கொண்டுள்ள வீரர் (குறைந்தபட்சம் 1000 ரன்கள்) என்ற உலக சாதனையும் தோனி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 102.71
2. விராட் கோலி : 96.21
3. மைக்கல் பெவன் : 86.25

- Advertisement -

4. கடைசி ஓவரில்: ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 50வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் தோனி படைத்துள்ளார். அவர் 7 இன்னிங்ஸில் 56 ரன்களை 329.41 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து இந்த சாதனை படைத்துள்ளார்.

Dhoni

5. சேசிங் கில்லி: அத்துடன் ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் அதிக முறை (20) சிக்சருடன் வெற்றியை பெற்றுக் கொடுத்த வீரர் என்ற சாதனையும் தோனி படைத்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2011 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட 9 முறையும் டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரில் 5 முறையும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் 2 முறையும் இந்தியாவுக்காக 2 முறையும் டெஸ்ட் போட்டிகளில் 1 முறையும் அவர் சிக்ஸருடன் பினிஷிங் செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:தோனி பர்த்டே ஸ்பெஷல்: இனிமே ஐ.பி.எல் தொடர்ல இப்படி ஒரு சாதனையை கேப்டனா படைக்க யாராலும் முடியாது – படிச்சா நீங்களும் ஆமானு சொல்லுவீங்க

6. 20வது ஓவரில் சரவெடி: மேலும் ஐபிஎல் தொடரில் 20வது ஓவரில் அதிக ரன்கள் (715) மற்றும் அதிக சிக்ஸர்கள் (5 அடித்த வீரர் என்ற மகத்தான சாதனையும் தோனி படைத்துள்ளார். 2வது இடத்தில் கைரன் பொல்லார்ட் 405 ரன்கள் மற்றும் 33 சிக்ஸர்களுடன் உள்ளார்.

Advertisement