வீணாகாத உழைப்பு ! வரலாற்றில் தனித்துவமான சாதனையுடன் பட்லர் வென்ற 37 விருதுகளும் – பரிசுகளும் இதோ

Jos Buttler vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் 10 அணிகள் பங்கேற்று நிலையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து மே 29இல் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் தனது சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. மறுபுறம் பேட்டிங்கில் 130 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் 2008க்குப் பின் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது.

buttler 1

அந்த அணிக்கு இந்த வருடம் முதல் போட்டியிலிருந்தே இங்கிலாந்து நட்சத்திரம் ஜோஸ் பட்லர் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து ரன் மழை பொழிந்தார். சொல்லப்போனால் கேப்டன் சஞ்சு சாம்சன் உட்பட இதர முக்கிய பேட்ஸ்மென்கள் தடுமாறியதையும் மறைக்கும் அளவுக்கு அவர்களுக்கும் சேர்த்து பேட்டிங் செய்த அவர் பைனலில் கூட அதிகபட்சமாக 39 (35) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

வீணாகாத உழைப்பு:
ஆனால் அவர் விளையாடிய ராஜஸ்தான் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால் அவரின் அத்தனை கடின உழைப்பும் போராட்டமும் ரன்களும் உபயோகம் இல்லாமல் போனது. வரலாற்றில் 2003 உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கர், 2019 உலக கோப்பையில் ரோகித் சர்மா, 2016 ஐபிஎல் தொடரில் விராட் கோலி என இதுபோல ரன் மழை பொழிந்த பேட்ஸ்மேன்கள் இறுதியில் கோப்பையைத் தவற விடுவது இது புதிதல்ல. இருப்பினும் இது நாட்டுக்காக விளையாடும் தொடர் அல்ல என்ற நிலையில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் 10 கோடி என்ற மிகப்பெரிய சம்பளத்தை வாங்கிய அவர் அதற்கு ஈடாக இரு மடங்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

Jos Buttler 103

ஐபிஎல் என்பது ஒரு தனியார் தொடர் என்ற நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் அவர் கடினமாக உழைத்து அட்டகாசமாக பேட்டிங் செய்த அத்தனை ரன்களும் அவருக்கு ஏராளமான விருதுகளையும் பரிசுகளையும் வாரி கொடுத்தன. அந்த வகையில் அவரின் உழைப்பு கொஞ்சம் கூட வீணாகவில்லை எனக்கூறும் வகையில் இந்த வருடம் அவர் அள்ளி குவித்த விருதுகளையும் பரிசுத் தொகையையும் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. முதலில் 17 போட்டிகளில் 4 அரைசதங்கள் 4 சதங்கள் உட்பட 863 ரன்களை குவித்த அவர் ஆரஞ்சு தொப்பி விருதை வென்று அதற்காக 10 லட்சம் பரிசுத்தொகை வென்றார்.

Jos Buttler 116

2. மேலும் இந்த வருடத்தின் லீக் சுற்றில் 3 போட்டிகளில் அதிக மதிப்பு மிக்க வீரர் என்ற விருதை வென்ற அவர் அதற்காக தலா 1 லட்சம் வென்றார். அத்துடன் இந்த வருடத்தின் தொடர் நாயகன் விருதை வென்ற அவர் அதற்காக 10 லட்சம் பரிசு வென்றார். இந்த வகையில் 4 விருதுகளும் 13 லட்சம் பணத்தையும் வென்றார்.

- Advertisement -

3. அத்துடன் இந்த தொடரில் லீக் சுற்றில் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்று 2 லட்சங்களும் நாக்-அவுட் சுற்றில் 1 ஆட்டநாயகன் விருதை வென்று 5 லட்சத்தையும் வென்றார். அந்த வகையில் 7 லட்சம் வென்றார்.

Jos Buttler 89

4. அதேபோல் பவர்பிளே ஓவர்களில் பட்டாசாக பேட்டிங் செய்த அவர் பவர் பிளேயர் எனும் விருதை லீக் சுற்றில் 4 முறையும் நாக் அவுட் சுற்றில் 1 முறையும் வென்று அதற்காக 5 லட்சங்களை வென்றார். அத்துடன் இந்த வருடத்தின் பவர் பிளேயர் என்ற விருதையும் வென்றதால் அதற்காக தனியாக 10 லட்சம் வென்றார். இந்த வகையில் 6 விருதுகள் மற்றும் 15 லட்சம் ரொக்கத்தை வென்றார்.

- Advertisement -

5. அதேபோல் ட்ரீம் லெவன் கேம் சேஞ்சர் விருதை லீக் சுற்றில் 4 முறை வென்ற அவர் பிளே ஆப் சுற்றில் 2 முறை வென்றார். அந்த வகையில் 6 விருதுடன் 6 லட்சத்தை அள்ளிய அவர் இந்த வருடத்தின் கேம் சேஞ்சர் விருதையும் இறுதியில் வென்றார். இந்த வகையில் இந்த பிரிவில் 7 விருதுகளுடன் 16 லட்சத்தை அவர் வென்றார்.

6. மேலும் சூப்பர் ஸ்ட்ரைக்கர் எனும் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்த வீரருக்கு வழங்கப்படும் விருதை லீக் சுற்றில் 1 முறையும் நாக் அவுட் சுற்றில் 1 முறையும் வென்ற அவர் அதற்காக 2 விருதுகளையும் 2 லட்சத்தையும் வென்றார்.

7. அதேபோல் ஒரு போட்டியில் அதிக பவுண்டரிகளை அடித்த பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும் விருதை 7 போட்டிகளில் வென்ற அவர் இந்த வருடத்தில் 83 பவுண்டரிகளுடன் அதிக பவுண்டரி அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்ததால் அதற்காக இறுதியில் தனி விருதை வென்றார். அந்த வகையில் 8 விருதுகளையும் 17 லட்சம் ரொக்கத்தையும் அவர் வென்றார்.

Jos Buttler Orange Cap

8. இத்துடன் மொத்தமாக 45 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் அதிக சிக்சர் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து அதற்காக 10 லட்சம் வென்றார். மேலும் லீக் சுற்றில் 5 போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்து அதற்காக தலா 1 லட்சங்களை வென்றார். இந்தப் பிரிவின் கீழ் 6 விருதுகளை வென்ற அவர் 15 லட்சம் ரொக்கம் வென்றார்.

இதையும் படிங்க : தோனி எடுத்த அந்த முடிவால நான் ரிட்டயர்டு ஆய்டலாம்னு நெனச்சேன் – பழைய நினைவை பகிர்ந்த சேவாக்

மேற்குறிப்பிட்ட அனைத்து விருதுகளையும் கணக்குப் போட்டால் இந்த வருடத்திலேயே இதர வீரர்களைக் காட்டிலும் அதிக பட்சமாக 37 விருதுகளை வென்ற அவர் அதன் வாயிலாகத் 95 லட்சம் ரொக்கத்தை வென்று அசத்தியுள்ளார். மேலும் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே சீசனில் ரன்கள், அதிக பவுண்டரிகள், அதிக சிக்சர் அடித்த பேட்ஸ்மேன் ஆகிய 3 முக்கிய பேட்டிங் சாதனைகளையும் ஒருசேர படைத்த முதல் பேட்ஸ்மேனாகவும் அவர் தனித்துவமான சாதனை படைத்துள்ளார்.

Advertisement